November 30, 2022
அழகு குறிப்புகள்

ஆண்களுக்கு தாடி பகுதியில் ஏற்படும் முகப்பருவை தடுப்பது எப்படி

பொதுவாக முகத்தில் உள்ள சருமத்தில் பல பிரச்சனைகள் பெண்களுக்கு ஏற்படும். இப்பொழுது இந்த பிரச்சனைகள் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஏற்படுகிறது. பெண்களின் முகத்தில் பொதுவாக ஏற்படக்கூடிய முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று முகப்பரு. இந்த முகப்பரு ஆண்களுக்கும் வந்து தொல்லை கொடுக்கிறது. அதிலும் அழகாக தாடி வைத்திருக்கக்கூடிய ஆண்களுக்கு இந்த முகப்பரு மிகப்பெரிய ஒரு பிரச்சனையாக மாறிவிடுகிறது.

ஆண்கள் தங்களுடைய அடர்த்தியான தாடிப்பகுதியில் முகப்பரு ஏற்படுவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இப்படி அடர்த்தியான தாடிக்குள் ஏற்படக்கூடிய முகப்பருவை எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். ஃபோலிகுலிடிஸ் என்று அழைக்கப்படும் பாக்டீரியா ஆண்களின் தாடிப்பகுதிகளில் முகப்பருவை ஏற்படுத்துகிறது. கடுமையான அரிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த பாக்டீரியா தொற்று காரணமாகவும் ஏற்படும்.

தாடியை சுத்தமாக ஒழுங்காக பராமரிக்காததன் காரணமாகவும் இந்த பாக்டீரியா மிக வேகமாக வளர ஆரம்பிக்கும். இந்த பாக்டீரியா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு உங்களுடைய தாடியை தினமும் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். தினமும் இரண்டு மூன்று முறையாவது முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். தொடர்ந்து முகத்தை கழுவி சுத்தமாக வைத்திருப்பதன் மூலமாக முகப்பரு மட்டுமல்லாமல் தோல் சம்பந்தமான எல்லா பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.

அதுபோல் முகத்தை தண்ணீரால் கழுவி விட்டு தாடி பகுதி நன்றாக உலரும் வரை மென்மையான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். முகம் கழுவிய பிறகு தண்ணீர் தாடியில் தங்கியிருந்தாலும் இந்த பாக்டீரியா வளர்வதற்கு இடம் கொடுத்துவிடும். தாடி சுத்தமாக இருப்பதற்கு தினமும் தவறாமல் தாடியை சீப்பால் சீவி வரவேண்டும். மாய்ஸ்சரைசர், தாடி எண்ணெய், கண்டிஷனர் போன்ற பொருட்களைப் பயன்படுத்தியும் தாடியை சுத்தமாக அழகாக வைத்திருக்கலாம்.

இதன் மூலமாக தாடி தொடர்ந்து வறண்டுபோகாமல் ஈரப்பதமாக வைத்திருக்க முடியும். தாடியில் வறட்சி ஏற்படும் பொழுது அது அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். அதுபோல குளிப்பதற்கு முன்னால் ஷேவிங் செய்வதற்கு பதிலாக குளித்த பிறகு சேவ் செய்து பாருங்கள். இந்த செயல்முறையால் தாடியில் ஏற்படக்கூடிய முகப்பரு வருவது தடுக்கப்படும். இதையும் தாண்டி மிக அதிக அளவில் தாடி பகுதியில் உங்களுக்கு முகப்பரு ஏற்பட்டால் சரும நிபுணரை உடனடியாக சந்தித்து முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. ஒரு சில நேரங்களில் அலர்ஜி போன்ற வேறு பல காரணங்களாலும் தாடிப்பகுதியில் தொடர்ந்து முகப்பரு வரலாம்.

Related posts

Leave a Comment