September 28, 2022
அழகு குறிப்புகள்

முகப்பரு குறைந்து அழகு பெருக வேண்டுமா.. இந்த டிப்ஸ் போதும்

முகத்தின் அழகை கெடுக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. அழகைக் கெடுக்கும் வகையில் தோன்றும் முகப்பருக்கள் முக அழகை சீர் குலைப்பதோடு சருமத்தையும் பாதிக்க செய்து விடுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் தோன்றும் பருக்கள் அந்த நேரங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் உண்டாவது. அது அந்த நேரங்களில் மட்டுமே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக பருவ வயது எட்டும் போது வரும் பருக்கள் குறிப்பிட்ட வயதுக்கு மேல் வராது. தொடர்ந்து மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்கு முகப்பரு எப்போதும் உருவாகும். முகப்பரு இருந்தால் முகத்தின் அழகு கெட்டு போய்விடும் என்று முகத்தில் தேவை இல்லாத கிரீம்களை வாங்கி போடுகின்றனர்.

அப்படி உபயோகபடுத்தும் அந்த க்ரீம்களினால் முகப் பருக்கள் குறைகிறதோ இல்லையோ சருமம் பொலிவை இழக்கின்றனர். ஆகவே முகப்பருவை போக்க முயற்சிக்கும் ஒவ்வொருவரும் அவ்வாறு செய்யாமல் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டே சரி செய்யலாம். இயற்க்கை முறையில் எப்படி முகப்பருவை குறைப்பது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டூத் பேஸ்ட் :

முகப்பரு உள்ள இடத்தில் ஐஸ் கட்டிகளை பருக்கள் உள்ள இடத்தில் தடவி அதன் பின் டூத்பேஸ்ட்டை நேரடியாக அப்ளை செய்யுங்கள். இதனால் முகப்பருவில் உள்ள கிருமிகள் மற்றும் நீரை உறிஞ்சி கூடுதலான எண்ணெய்யையும் உள்ளிழுத்துக் கொள்ளும், பருக்களும் நீங்கும். பேஸ்டில் ஹைட்ரஜன் பராக்ஸைட் இருப்பதால், சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இதைத் தவிர்க்கலாம்.

வினிகர் :

இரவு தூங்கும்முன், பருக்கள் உள்ள இடத்தில் இதைத் தடவி காலை எழுந்து பார்த்தால் உங்களாலேயே நம்ப முடியாத அளவிற்கு நல்ல பலன் கிடைக்கும். ஏனென்றால் இதில் சரும நன்மைகள் மிக அதிகம்.

தேன் :

தேன் பருக்களுக்கு சிறந்த ஆண்டி மைக்ரோபியலாக இருக்கும். பஞ்சை தேனில் நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் பருக்கள் முற்றிலும் மறைந்துவிடும்.

வெள்ளரிக்காய் :

சருமத்தை மென்மையாக்கக் கூடிய சக்தி வெள்ளரிக்காயில் இருக்கிறது. இதில் வைட்டமின்கள் A, E மற்றும் C நிறைந்துள்ளன. இது எண்ணெய் சருமம் உள்ளவர்களுடைய அதிகப்படியான எண்ணெயை நீக்கி முகப்பருக்களையும் முற்றிலும் நீக்கும். வெள்ளரிக்காயை அரைத்து அதை முகத்தில் தடவுங்கள் அல்லது தினமும் வெள்ளரிக்காய் ஊற வைத்த நீரால் முகத்தைக் கழுவி வர முகப்பரு சரியாகும்.

ஈஸ்ட்:

ரோஸ் வாட்டரில் ஈஸ்ட் போட்டு 20 நிமிடம் ஊற வைத்து பின் குழைத்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும். இப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால் பரு நீங்கும்.

எலுமிச்சை சாறு :

முகப்பருக்கள் வரக் காரணமான கிருமிகளை எலுமிச்சை முற்றிலும் அழித்துவிடும். எலுமிச்சை சாறைப் பிழிந்து, அதன் சாறை பருக்களின் மேல் ஒத்தி எடுத்தால் பருக்கள் உடைந்து இருந்த இடம் தெரியாமல் போகும்.

வேப்பிலை:

வேப்பிலை பவுடரை ரோஸ் வாட்டரில் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இரவில் முகம் முழுவதும் பூசிய பிறகு, படுத்து உறங்கி மறுநாள் கழுவி விட வேண்டும். தொடர்ந்து செய்து வர, முகப்பரு குறைந்து இருப்பது தெரியும்.

க்ரீன் டீ :

கிரீன் டீ பேக்கை தண்ணீரில் நனைத்து அல்லது ஃபிரிஜ் ஃப்ரீசரில் பேக்கை வைத்து பருக்கள் உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் பருக்கள் முற்றிலும் நீங்கும்.

பூண்டு :

தொற்றுக் கிருமிகளை நீக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. குறிப்பாக இதில் இருக்கும் சல்ஃபர் முகப்பருக்களை நீக்கக் கூடியது. பூண்டை மைய அரைத்து அதன் சாறை பருக்கள் உள்ள இடத்தில் தடவுங்கள். முகப்பருக்கள் நீங்கி, முகத்தை அழகு பெற செய்யும்.

புதினா :

இதில் இருக்கும் சாலிசிலிக் அமிலம் பருக்களை நீக்க உதவும். மூடியுள்ள சருமத் துளைகளை நீக்கும். இறந்த செல்களையும் நீக்கும். புதினாவை அரைத்து அதில் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ நல்ல பலன் கிடைக்கும்.

டீ ட்ரீ ஆயில் :

முகத்தில் உள்ள கிருமிகளை நீக்கும் ஆண்டி பாக்டீரியலாக செயல்படும். எண்ணெயில் பஞ்சை நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் ஒத்தி எடுத்து 15 – 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவிவிடுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

ரோஸ் வாட்டர்:

துளசி இலை பவுடர் ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, முல்தானிமட்டி ஒரு தேக்கரண்டி நன்றாக கலந்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேக்காக போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வர முகப்பரு மறையும்.

பட்டை:

பட்டைத் தூளை தேன் கலந்து குழைத்து பரு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இப்படி 2 மாதம் தொடர்ந்து செய்து வர பரு நீங்கும்.

Related posts

Leave a Comment