November 27, 2022
டிப்ஸ்

உங்க முகத்தில் தேவையில்லாம முடி வளருதா.. இயற்க்கையாக எளிமையாக போக்கலாம் தெரியுமா ?

பெண்கள் பலருடைய முகத்திலும் தேவையில்லாமல் முடி வளர்வது உண்டு. இதனை பலரும் அழகு நிலையத்திற்கு சென்று எடுத்து வருகின்றனர். ஆனால் அழுகு நிலையம் எதுவும் செல்லாமல் வீட்டில் இருக்கும் இயற்க்கை பொருள்களை கொண்டே இந்த முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம். அப்படி என்னென்ன பொருள்களை பயன்படுத்தி இந்த முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

1. நீங்கள் ஆரஞ்சு பழம் சாப்பிடும் போது பெரும்பாலும் அதன் தோலை குப்பையில் தான் போடுவீர்கள். ஆனால் இந்த தோலை குப்பையில் எறியாமல் நிழலில் உலரவைத்து அதனை பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் பாசி பயிறு மாவு, சிறிதளவு சந்தன பவுடர் மற்றும் ஒரு ஸ்பூன் ரோஸ்வாட்டர், எலுமிச்சை சாறு போன்றவைகளை கலந்து நன்றாக குழைத்து அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து கழுவி வந்தால் முடி எளிமையாக உதிர்ந்து விடும்.

2. முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தும் மிக சிறந்த பொருளில் ஒன்றாக எலுமிச்சை பழம், சர்க்கரை உள்ளது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இரண்டுஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து ஒருபாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்து வந்ததும் இறக்கி மிதமான சூடாக இருக்கும் போது முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அடிக்கடி இவ்வாறு செய்துவந்தால் வளர்ந்த முடி உதிர தொடங்கும்.

3. ஒரு முட்டை எடுத்து அதன் வெள்ளைக்கருவை எடுத்து அதில் சோள மாவு, சர்க்கரை போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்கி அதனை முகத்தில் பூசி பத்து நிமிடம் உலரவைத்து முகத்தை கழுவ வேண்டும். இதனை ஒரு வாரத்தில் மூன்று நாள்கள் செய்து வந்தால் முடி வளர்வது நீங்கும்.

4. இரண்டு ஸ்பூன் ஓட்ஸை சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் வாழைப்பழத்தையும், சிறிதளவு தேனையும் சேர்த்து பசைபோல் குழைத்து அதை முகத்தில் நன்றாக பூசி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர முடி வளர்வது தடைபடுவதுடன் சருமமும் பொலிவுடன் தோற்றமளிக்கும்.

5. கடலை மாவு, உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு, தேன் ஆகியவைகளை நன்கு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முடி வளர்வதை நிறுத்தி விடலாம்.

Related posts

Leave a Comment