September 28, 2022
டிப்ஸ்

வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் எவ்வாறு பாதுகாப்பாக வைக்கலாம்?

நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஓர் முக்கியமான பொருள்தான் வெங்காயம். காய்கறிகளிலேயே வெங்காயம் ஒரு தனித்துவமான சுவையைக் கொண்டது. அதோடு இது சைவ மற்றும் அசைவ பதார்த்தங்களில் அதிகம் பயன்படுகிறது. குழம்பு, சாம்பார் போன்றவற்றிற்கு ஒரு நல்ல சுவையை தரக்கூடியதாகவும் இருக்கிறது. இத்தகைய வெங்காயம் நல்ல சுவையைக் கொண்டிருப்பதோடு, வலுவான வாசனையையும் கொண்டது.

தற்போது நம் அனைவரது வீட்டிலும் ஃப்ரிட்ஜ் உள்ளது. இதனால் பலரும் தங்களின் சமையல் வேலையை சுலபமாக்குவதற்கு சும்மாயிருக்கும் நேரத்தில் வெங்காயத்தை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்வார்கள். ஏனெனில் சமைக்கும் போது வெங்காயத்தை, குறிப்பாக சின்ன வெங்காயத்தை உரித்து வெட்டுவதற்கு நேரம் அதிகமாகும். ஆகவே பலரும் வெங்காயத்தை தோலுரித்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்வதுண்டு.

ஆனால் வெங்காயத்தை தோலுரித்து ஃப்ரிட்ஜில் வைப்பது உண்மையில் பாதுகாப்பானதுதானா என்று நாம் சிந்திக்கிறது இல்லை. ஏன் வெங்காயத்தை வெட்டி ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்ற கேள்வி உங்களுக்குள் வரலாம். அப்படியென்றால் எப்படி பாதுகாப்பாக வைக்கலாம் என்று நீங்கள் கேக்கலாம்., இந்த கேள்விகளுக்கான பதிலைத்தான் நாம் இந்த பதிவில் பார்ப்போம்…

வெங்காயத்தை ஏன் வெட்டி ஃப்ரிட்ஜில் வைப்பது சிறந்தது அல்ல?

வலுவான வாசனையைக் கொண்டதால், வெங்காயத்தை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்தால், அது ஃப்ரிட்ஜின் உள்ளே ஒரு வித கெட்டவிதமான துர்நாற்றத்தை உருவாக்கும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, வெங்காயத்தில் சல்பர் அதிகமாக உள்ளது மற்றும் பல மருத்துவ குணங்களும் உள்ளன. அதோடு இதில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்ததுள்ளன.

வெங்காயம் எவ்வளவு தான் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், அதை தோலுரித்து வெட்டி ஃப்ரிட்ஜில் வைப்பது சிறந்த யோசனை அல்ல. ஏனெனில் வெங்காயத்தின் தோலுரித்து வெட்டி ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, அது சுற்றுச்சூழலில் உள்ள பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகளால் எளிதில் மாசுபடுத்தப்படலாம். அதுமட்டுமல்லாமல் இதுபாக்டீரியாகளை தன்வசம் இழுத்து எடுத்துக்கொள்ளும்., மேலும் இது நோய்க்கிருமிகளின் இனப்பெருக்கத்திற்கு வழிவகுத்து, நினைப்பதை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

வெங்காயத்தை வெட்டி ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்பதற்கான மற்றொரு காரணம், வெங்காயத்தின் தோலுரித்து வெட்டும் போது, வெங்காயத்தின் செல்கள் சீர்குலைந்து சாறுகளை வெளியிடும். இந்த சாறுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குளிர்ச்சியான காற்றில் நீண்ட நேரம் வெளிப்படும் போது, அது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

ஒருவேளை வெங்காயத்தை உரித்து ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, ஃப்ரிட்ஜில் உள்ள ஈரப்பதம் மற்றும் குளிர்ந்த வெப்பநிலை, வெங்காயத்தின் சுவையை இழக்க வைத்து, வாடச் செய்துவிடும். வெங்காயம் வாட ஆரம்பித்தால், அதில் நோய்க்கிருமிகள் உருவாக ஆரம்பித்து, அதில் உள்ள ஊட்டச்சத்து அளவு குறைந்து, பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்துவிடும்.

நிபுணர்களின் கருத்து நிபுணர்களின் கூற்றுப்படி, வெங்காயத்தை உரித்து வெட்டி ஃப்ரிட்ஜில் வைப்பது சிறந்த யோசனை அல்ல. உங்களுக்கு வெங்காயத்தை முழு சத்தும் கிடைக்க வேண்டுமானால், வெங்காயத்தை உரித்த உடனேயே பயன்படுத்த வேண்டும்.

வெங்காயத்தை எப்படி ஃப்ரிட்ஜில் சேமிக்கலாம்?

ஆனாலும் கண்டிப்பாக வைக்கவேண்டுய சூழ்நிலை வந்தால்., யு.எஸ்.டி.ஏ-யின் படி, வெங்காயத்தை 40 டிகிரி பாரன்ஹீட் அல்லது குளிர்சாதன பெட்டியின் உள்ளே 4.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சீல் வைத்த கொள்கலனில் அல்லது ஏர் டைட் கவர்-ல் வைப்பதே சிறந்த வழியாகும்.

வெங்காயத்தை சேமிப்பதற்கான மற்றொரு வழி, உரிக்கப்படும் ஒவ்வொரு வெங்காயத்தையும் உலர்ந்த டிஸ்யூ பேப்பரால் மூடி வைக்க வேண்டும். இதனால் இது காற்றில் ஈரப்பதத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை குறைக்கும்.

Related posts

Leave a Comment