November 27, 2022
டெக்னாலஜி

புதிதாக மறு வடிவமைப்பு செய்யப்பட்ட பேஸ்புக் டெஸ்க்டாப் வலைதளத்திற்கு எப்படி மாறுவது!!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் பேஸ்புக், வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பேஸ்புக் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட தனது வலைதளத்தை டார்க் மோட் அம்சத்துடன் வெள்ளிக் கிழமை வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனம் தனது தளத்தின் புதிய வடிவமைப்பை முதலில் எப் 8 டெவலப்பர் கான்பரன்சில் 2019 ஆம் ஆண்டு காண்பித்தது.

இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறிய எண்ணிக்கையிலான பயனர்களுடன் தனது புதிய அம்சத்தை பேஸ்புக் நிறுவனம் சோதிக்க ஆரம்பித்தது.

இப்போது இந்த புதிய டெஸ்க்டாப் பதிப்பு உலகம் முழுவதும் உள்ள பல பயனர்களுக்கு நேரலையில் கிடைக்கிறது. நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால் அடுத்த சில நாட்களில் இது கிடைக்கும்.

இப்படி புதிதாக மறு வடிவமைப்பு செய்யப்பட்ட டெஸ்க்டாப் மொபைல் அனுபவத்திற்கு ஒத்ததாக உள்ளது. அதாவது புதிய வடிவமைப்பில் வீடியோக்கள், விளையாட்டுகள் (Games) மற்றும் குழுக்களை (Groups) கண்டுபிடிப்பது எளிதாக உள்ளது என அந்த நிறுவனம் கூறுகிறது.

பேஸ்புக்கில் மொபைல் ஆப்-ஐ போல டெஸ்க்டாப் தளமும் எளிதில் லோடாகும் (load faster). புதிய வடிவமைப்பு ஈவென்ட்ஸ், பேஜஸ், குரூப்ஸ் (Events, Pages, Groups) மற்றும் விளம்பரங்களை உருவாக்குவதை எளிதாக்குகிறது.

புதிய வலைதளத்துக்கு எப்படி மாறுவது:

பேஸ்புக்கின் முகப்பு பக்கத்துக்கு செல்லவும். மேல் வலது பக்கத்தில் உள்ள கீழ் அம்பு (down arrow) பட்டனை அழுத்தவும். அதன்பின் சுவிட்ச் டு நியூ பேஸ் புக் (Switch to new Facebook) என்பதை தேர்வு செய்யவும்.

ஒரு வேளை டார்க் மோடை (dark mode) எனேபிள் (enable) செய்யவேண்டுமென்றால், கீழ் அம்பு பட்டனை அழுத்தி டார்க் மோட் டோஃக்லே (Dark Mode toggle) ஐ அழுத்தவும்.

பயன்கள் :

புதிதாக மறு வடிவமைப்பு செய்யப்பட்ட டெஸ்க்டாப் அனுபவத்தின் சிறப்பம்சமே புதிய டார்க் மோட் தான். அது கண்களுக்கு ஏற்படும் சேர்வை குறைக்கும். மேலும் ரீடேபிளிட்டி ஆப் டெஸ்ட் (readability of text) மற்றும் பெட்டெர் கான்ட்ராஸ்ட் (better contrast) ஐ கொடுக்கும்.

Related posts

Leave a Comment