September 28, 2022
சமையல்

கணவன்மார்களே உங்கள் ஆசை மனைவிக்கு இப்படி வறுத்து அரைத்த மட்டன் குழம்பை ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள்…! அப்புறம் நடக்கும் மாயத்தை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்…!

அன்றைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் எந்த ஒரு அசைவ உணவுகளை தயாரித்தாலும் அவர்கள் ஒவ்வொரு மசாலாப் பொருட்களையும் வறுத்து அம்மியில் அரைத்து பின்புதான் சமையலில் சேர்த்துக் கொள்வார்கள் இதன் சுவையே அற்புதமாகவும் அட்டகாசமாகவும் இருக்கும்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் அம்மியில் அரைப்பது என்பது ஒரு சவாலான விஷயமாகவே பெண்களுக்கு உள்ளது. ஆதலால் கணவன்மார்களே நீங்கள் இந்த வாரத்தின் கடைசி நாளில் உங்கள் ஆசை மனைவிக்கு அம்மியில் இவ்வாறாக அரைத்து ஒரு மட்டன் குழம்பை செய்து கொடுத்து பாருங்கள்., அப்புறம் நடக்கும் மாயத்தை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்…

இந்த மட்டன் குழம்பு சாதம், சப்பாத்தி, நாண், பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். ஏன் இட்லி, தோசைக்கும் அட்டகாசமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ

சின்ன வெங்காயம் – 15

உருளைக்கிழங்கு – 1

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

தண்ணீர் – 1/2 கப்

வறுத்து அரைப்பதற்கு:

துருவிய தேங்காய் – 1/2 கப்

சீரகம் – 1 டீஸ்பூன்

சோம்பு – 1 டீஸ்பூன்

கிராம்பு – 3

பட்டை – 1 இன்ச்

பிற பொருட்கள்:

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள் – டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

தண்ணீர் – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிது

எண்ணெய் – 3 டீஸ்பூன்

சோம்பு – 1/2 டீஸ்பூன்

வரமிளகாய் – 3

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டன், சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி குக்கரை மூடி, எட்டுவிசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, அம்மியில் வைத்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் வைத்து நன்கு வேக வைக்க வேண்டும்.

அடுத்து அதில் வேக வைத்த மட்டனை நீருடன் சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரையும் ஊற்றி கிளறி, எண்ணெய் மேலே மிதக்கும் அளவில் நன்கு கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான வறுத்தரைச்ச மட்டன் குழம்பு ரெடி.

Related posts

Leave a Comment