August 18, 2022
கனவுகள்

கோழி, வான்கோழி, வாத்து, அல்லது அன்னம் உங்கள் கனவில் வந்தால் …!

சிலருக்கு வாழ்க்கையில் சில நேரம் கனவு வருகிறது. இன்னும் சிலருக்கு கனவே வாழ்க்கையாகிறது. சில நேரங்களில் கோழி, வான்கோழி, வாத்து, அல்லது அன்னம் போன்றவை மிகவும் அரிதாக கனவில் வருகிறது. இதற்கு கனவு சாஸ்திரத்தில் என்ன பலன் என்பதை பற்றி இந்தப்பதிவில் பார்க்கலாம்.

கோழி:

கோழி அதன் குஞ்சுகளோடு உணவு தேடுவது போல் கனவு வந்தால், உங்கள் பழைய வீடு மற்றும் கட்டிடங்களை சீர்செய்து புதுப்பிக்கும் நிலை ஏற்படும் என்று அர்த்தம்.

சேவல்:

சேவல் கூவுவது போல் உங்களுக்கு கனவு வந்தால், மிகப்பெரிய மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட போகின்றன என்று அர்த்தம்.

கோழி மற்றும் சேவல்:

கோழி மற்றும் சேவலை ஒன்றாக உங்கள் கனவில் வந்தால் நல்ல சம்பவங்கள் உங்கள்வாழ்க்கையில் நடைபெற போகின்றன என்று அர்த்தம்.

வான்கோழி:

வான்கோழி உங்கள் கனவில் வந்தால் அது நல்லதல்ல, குடும்பத்தில் சோக நிகழ்ச்சி நடைபெறும் என்று அர்த்தம்.

வாத்து:

வாத்து உங்கள் கனவில் வந்தால், நீங்கள் கேட்ட இடத்தில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும் என்று அர்த்தம்.

வாத்து மற்றும் குயில்:

வாத்து மற்றும் குயிலை உங்கள் கனவில் நீங்கள் கண்டால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் விரைவில் வெற்றி பெறும் என்று அர்த்தம்.

அன்னபறவை:

அன்னபறவை உங்கள் கனவில் வந்தால் தெய்வ அருள் உங்களுக்கு கிடைக்கும் என்று அர்த்தம். அனால் கறுப்பு நிற அன்னப் பறவையை நீங்கள் கனவில் கண்டால் அது நல்லதல்ல.

Related posts

Leave a Comment