January 31, 2023
உடல்நலம்

நான்கு ஏலக்காய்களை சூடான தண்ணீரில் கொதிக்கவைத்து இரவில் குடித்து வந்தால்

ஒரு கப் வெந்நீரில் ஒரு சில ஏலக்காய்களைச் சேர்த்து கொதிக்கவைத்து குடிப்பது உடல் எடையை குறைக்க ஒரு அற்புதமான பானம் என்று உங்களுக்குத் தெரியுமா? நம்முடைய உடல் எடையை குறைப்பதற்கான ரகசியம் அதிகம் நம்முடைய சமையலறையில் உள்ளது. அதில் மிகவும் முக்கியமான ஒன்று ஏலக்காய். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடையை குறைகிறது.

ஏலக்காயில் மெலடோனின் அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. கொழுப்பை வேகமாக எரிகிறது. இதனால் உடல் எடை வேகமாக குறைகிறது.

பண்டைய காலங்களில் ஏலக்காயை உணவு உண்ட பிறகு சாப்பிடுவார்கள். இது வாய் புத்துணர்ச்சியாக இருக்கவும் உதவுகிறது. ஏலக்காய்களை மென்று சாப்பிடும் பொழுது வெளிவரும் சாறு செரிமானத்தை மேம்படுத்தவும். கொழுப்பை வேகமாக எரிக்கவும் உதவுகிறது. ஆகையால் நீங்கள் வேகமாக உடல் எடையை குறைக்க திட்டமிட்டால் இந்த பானம் உங்களுக்கு உதவும்.

இந்த ஏலக்காய் பானம் செய்ய ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் 4 ஏலக்காய்களை உடைத்து தண்ணீரில் சேர்க்கவும். 1 நிமிடம் கொதித்த பிறகு பானத்தை வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் படுக்கைக்கு செல்லும் முன்னர் குடியுங்கள். இது தூக்கத்தை தூண்டும். வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும். கூடவே உங்கள் உடல் எடையை குறைக்கும்.

Related posts

Leave a Comment