January 31, 2023
சினிமா

உங்களுக்கு காதலி இருக்காங்களா அப்ப இந்த படங்களை உங்க காதலி கூட பாருங்க!!!

இந்த நவீன கால கட்டத்தில் காதலிகள் இலாதவர்கள் இருக்கவே முடியாது. காதலர்கள் தங்கள் காதலிகளை சுற்றுலா தலங்களுக்கு கூட்டிட்டு போறது முதல் பல பொருள்கள் வரை வாங்கி கொடுக்கின்றனர். மேலும் காதலர்கள் தங்கள் காதலியுடன் இணைந்து தங்களுக்குப் பிடித்த காதல் படம் பார்க்க விரும்புவர். காதலர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ரொமாண்டிக் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தில்வாலே துல்ஹனியாங் லே ஜாயேங்கே

1995ம் ஆண்டு ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் ஷாருக் கான், கஜேல் நடிப்பில் வெளியான காதல் காவியம். ராஜ், சிம்ரன் ஆகிய இரு கதாபாத்திரங்களும் இன்றும் 40 வயதைக் கடந்த பலர் மனங்களில் நீங்கா இடம் பெற்று உள்ளனர். தற்போதைய கவுதம் மேனன் காதல் படங்கள் வரை இதன் தாக்கம் இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

குச் குச் ஹோதா ஹே

கடந்த பல வருடங்களுக்கு முன்பு வெளியான பாலிவுட் படம் இது. ஷாருக் கானின் விசிறிகள் பார்க்க விரும்பும் காமெடி கலந்த காதல் படம். கஜோல், ராணி முகர்ஜி ஆகியோருடனான ஷாருக்கின் நட்பு காதல் பல இளம் காதலர்களை கவர்ந்தது.

ஏக் துஜே கேலியே

பாலசந்தர் இயக்கத்தில் கமல், ரதி நடிப்பில் வெளியாகி வரலாற்றில் என்றும் நிலைத்த காதல் காவியம் ஏக் துஜே கேலியே. காதலை குடும்பத்துக்கு நிரூபிக்க ஒரு வருடம் பிரிந்து வாழும் காதலர்களின் கதை. இதன் சோக முடிவு இன்றும் காதலர்களை கலங்கவைக்கும். 300 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது இத்திரைப்படம்.

மேரா நாம் ஜோக்கர்

ராஜ்கபூர் படங்களில் அதிக காதலர்களை கவந்த படம் இது. ஒரு சர்கஸ் கலைஞனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலங்களில் உண்டாகும் காதல் குறித்து பதிவு செய்யும் படம்.1970களில் ஹிந்தி சூப்பர்ஸ்டார் ராஜ் கபூர் தயாரித்து இயக்கி, நடித்த படம். இன்றைய ஆட்டோகிராஃப், பிரேமம் படங்களின் முன்னோடி. ராஜ்கபூர் படங்களில் அதிக காதலர்களை கவர்ந்த படம் இது.

உயிரே

மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக் கான், மனீஷா கொய்ராலா, பிரீத்தி ஜிந்தா நடிப்பில் வெளியான தேசப்பற்றும் காதலும் கலந்த காதல் காவியம். இதுவரை காதலில் விழாதவர்களைக் கூட காதலில் விழவைக்கும் இப்படத்தில் ரொமாண்டிக் காட்சிகள் மற்றும் ரகுமானின் பாடல்கள்.

அலைப்பாயுதே

2000ம் ஆண்டு காதலர்களின் எவர்கிரீன் காதல் படம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தை பெறாமல் திருட்டு கல்யாணம் செய்துகொள்ளும் நவீன காதர்கள் வாழ்க்கையில் படும் இன்னல்கள் குறித்து யதார்த்தமாக விளக்கும் படம். இன்றும் பலரது காலர் டியூனாக இருப்பவை இப்பட பாடல்கள்.

கோதாவரி

தெலுங்கு இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில் சுமந்த், கமாலினி முகர்ஜி நடிப்பில் வெளியான மனதை வருடும் தெலுங்கு காதல் காவியம் கோதாவரி. வாழ்க்கையில் பணம், அந்தஸ்தை தாண்டி குடும்ப உறவுகள் மற்றும் காதல் எவ்வளவு முக்கியம் என உணர்த்தும் படம்.

180

மரணத்தின் விளிப்பில் இருக்கும் நாயகனுக்கு எதேச்சையாக அமையும் காதல் பற்றி கூறும் படம். மரணத்திற்குப் பின்னரும் நிலைத்திருப்பது அன்பைத் தவிர வேறேதுமில்லை என நிரூபித்த காதல் படம்.

விண்ணைத் தாண்டி வருவாயா

காதலியை பிரிந்த வலியிலும் வாழமுடியும் என லவ் ஃபெய்லியர்களின் வாழ்க்கையை உலகுக்கு உரைத்த படம் இது. காதலில் தோல்வி அடைந்தவர்களும் ரசிக்கும் வண்ணம் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

பிரேமம்

நவீன ஆட்டோகிராஃப். வாழ்க்கையில் தோன்றி மறையும் காதலுக்காக வாழ்க்கையை சிதைத்துக் கொள்ளக்கூடாது. காதலில் வெற்றியோ, தோல்வியோ நகர்ந்துகொண்டே இருக்க வேண்டுமே தவிர விரக்தி அடைவது தவறு. உங்களுக்கான பெண் என்றாவது வருவாள் என ஆண்களுக்கு உணர்த்தும் படம்.
பெண் என்றாவது வருவாள் என ஆண்களுக்கு உணர்த்தும் படம்.

Related posts

Leave a Comment