ஓஹியோவின் நெவார்க்கில் அமைந்துள்ள லாங்காபெர்கர் கட்டுமான நிறுவனம் உலகின் விசித்திரமான கட்டிடத்தை கட்டியுள்ளது . கூடை போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த கட்டிடம் அமெரிக்காவின் “பேஸ்கட் பில்டிங்”(Basket building) என அழைக்கப்படுகிறது. இந்த கட்டிடம் குறித்த தகவல்கள் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஓஹியோவின் நெவார்க்கில் உள்ள பிக் கூடை கட்டிடம், அமெரிக்க கைவினைப் பொருட்கள் மேப்பிள் மர கூடைகள் மற்றும் பிற தயாரிப்புகளை தயாரிக்கும் லாங்காபெர்கர் நிறுவனத்தின் தலைமையக கட்டடமாகும் . இது மைமெடிக் (mimetic) அல்லது புதுமையான கட்டிடக்கலைக்கு மிகவும் பிரபலமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். இதில் கட்டிடம் அனைவரும் ஆச்சர்யபடும் விதம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
டேவ் லாங்காபெர்கர் இந்த கட்டிடத்தை கட்ட கூடைகளில் ஒன்றைச் சுட்டிக்காட்டி, “அதைப் போலவே கட்டடத்தை கட்ட பரிந்துரைத்துள்ளார். அதன்படி 180,000 சதுர அடி பரப்பளவில் 7 மாடியுடன் இந்த கூடை வடிவ கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 192 அடி நீளமும், 126 அடி அகலமும், 208 அடி நீளமும், 142 அடி அகலமும் உடையது.
இந்த கூடைக் கட்டிடத்தை கட்டி முடிக்க சுமார் இரண்டாண்டுகள் ஆகியுள்ளது. இந்த கட்டட பணி 1997 இல் நிறைவடைந்துள்ளது. மேலும் அதே வருடத்திலேயே பில்ட் ஓஹியோ விருது கிடைத்துள்ளது. இந்த 7 மாடிகட்டிடமானது சென்ட்ரல் ஏட்ரியம் மற்றும் கண்ணாடி இழை மூலம் இயற்கையான ஒளியை வழங்குகிறது.
இது இரண்டு எஃகு கைப்பிடிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கைப்பிடிகள் 75 டன் எடையுள்ளவை. அவை உறைபனியிலிருந்து தடுக்க வெப்பமூட்டும் கூறுகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. எனவே கீழே உள்ள கண்ணாடி ஏட்ரியத்தை பனி விழாமல் பாதுகாக்கிறது. இந்த கட்டிடத்தை கட்ட சுமார் 3 கோடி டாலர் செலவாகியுள்ளது. இந்த கூடை வடிவ கட்டிடம் இரவில் பார்ப்பதற்கு ஒரு அற்புதமான காட்சியாகும்.