குழந்தைகள் எப்பொழுதுமே இனிமையானவர்கள். பிறந்த குழந்தைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்கள். எப்பொழுதும் அவர்களை எடுத்து வைத்து கொஞ்சிக் கொண்டே இருக்க வேண்டும் போல் நமக்கு தோன்றும். இப்படிப்பட்ட குழந்தைகளை பற்றிய ஒரு சில சுவாரஸ்ய தகவல்களை பற்றி பார்ப்போம்.
ஒவ்வொரு மூன்று வினாடிக்கும் ஒரு குழந்தை உலகில் பிறக்கிறது. ஒவ்வொரு நிமிடத்திற்கும் 20 குழந்தைகள் பிறக்கிறது. ஒவ்வொரு மணி நேரத்திற்கு 1200 குழந்தைகள் பிறக்கிறது. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 29 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன.
ஜனவரி மாதத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகள் அதிக எடையுடன் இருக்கும் என பெரும்பாலான மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களாம். ஆனால் அது உண்மை இல்லையாம். மே மாதத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகள் மற்ற மாதத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகளை விட 200 கிராம் எடை அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சிகள் சொல்கிறதாம்.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கண்ணிலிருந்து கண்ணீர் வெளி வராது. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு சுமார் மூன்று வாரங்கள் வரை கண்களில் இருந்து கண்ணீர் வராது. பிறக்கும் பொழுது அவர்களுடைய கண்ணீர் வெளிவரக்கூடிய குழாய்கள் முழுமையாக வளர்ச்சி அடையாததே இதற்கு காரணம் என்ன சொல்லப்படுகிறது.
குழந்தைகள் பிறக்கும் பொழுது அவர்களுக்கு 300 எலும்புகள் இருக்கும். பெரியவர்களை விட இது கிட்டத்தட்ட 50% அதிகம். இந்த எலும்புகள் ஒரு சில ஆண்டுகளில் ஒன்றாக இணைய தொடங்குகிறது. ஒரு சில ஆண்டுகளில் 300 எலும்புகள் 206 எலும்புகளாக குறைகிறது. புதிதாக பிறந்த குழந்தையின் மண்டை ஓட்டில் பல எலும்புகள் இருக்கும். இது ஒரு சில ஆண்டுகளில் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு எலும்பாக மாறுகிறது.
பிறந்த குழந்தைகள் எப்பொழுதும் தூங்கிக் கொண்டே இருக்கும். இது நாட்கள் செல்ல செல்ல குறைந்து கொண்டே வரும்.
பிறந்த குழந்தைகள் தினமும் 300 முறை சிரிக்கிறது. வளர்ந்த பெரியவர்கள் ஒரு நாளைக்கு வெறும் 60 முறை மட்டுமே சிரிக்கிறார்கள்.
பிறந்த குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் சாப்பிடவும் சுவாசிக்கவும் முடியும். குழந்தைகளுக்கு ஏழு மாதங்கள் வரை ஒரே நேரத்தில் சாப்பிடுவதற்கும் சுவாசிப்பதற்கும் ஏற்ப தனித்துவமான திறன் உள்ளது. இந்த நேரங்களில் குழந்தைக்கு சளி ஏற்படும்பொழுது இல்லையென்றால் மூக்கில் அடைப்பு ஏற்படும் பொழுது அவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளார்கள். இந்த காலகட்டங்களில் சாப்பிடவும் அவர்களால் முடியாது.
ஒரு குழந்தையின் மூளை அதனுடைய முதல் வருடத்தில் இரண்டு மடங்கு பெரிதாகும். அவர்களுடைய ஐந்து வயதுக்குள் அது பிறக்கும் பொழுது இருந்த அளவை காட்டிலும் மூன்று மடங்கு அதிகரிக்கும்.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு குறுகிய பார்வை மட்டுமே இருக்கும். அவர்களுக்கு முன்னால் எட்டிலிருந்து 14 அங்குலங்கள் வரை மட்டுமே சரியாக பார்க்க முடியும்.
பிறந்த குழந்தை பகல் மற்றும் இரவு வித்தியாசத்தை அடையாளம் காண்பதற்கு 12 வாரங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.