January 31, 2023
தகவல்

உலகின் மிகஉயரமான பாலத்தை கொண்ட லடாக் பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள்!!!!

இந்தியாவில் பலரும் செல்ல விரும்பும் சுற்றுலாத்தலங்களில் மிகவும் முக்கியமானதாக லடாக் உள்ளது. இந்த லடாக் பற்றி நாம் அறியாத சில ரகசியங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

லடாக்கில் இருக்கும் அதிசயங்களில் ஒன்றான மேக்னடிக் ஹில் மிகவும் புகழ்ப்பெற்றது. இங்குநாம் கார் பார்க்கிங் செய்து விட்டு ஜன்னல் வழியாக பார்த்தால் உங்கள் கார் இடம் நகர்ந்து செல்வதைப் போலத் தோன்றும்.

லடாக் என்பது உண்மையில் உயரமான பீடபூமியாகும். கடல் மட்டத்திலிருந்து 9,800 அடி உயரத்தில் இருக்கிறது. இமயமலையில் தொடங்கி குன்லுன் மலைத் தொடர்வரை நீள்கிறது.

கிபி 1600 ஆம் ஆண்டு செங்கி நாம்கியாய் என்பவரால் கட்டப்பட்ட அரச மாளிகை மிகவும் பெயர்ப்பெற்றது. திபெத்திலேயே மிகவும் பிரபலமான பள்ளிக்கூடமாக திகழ்வது இங்குள்ள டிரக் ஒயிட் லோட்டஸ் பள்ளி பள்ளிக்கூடமாகும். இதில் பல நூறு மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

லே- வில் உள்ள கர்சூ ஐஸ் ஹாக்கி ரிங்க்(Karzoo Ice Hockey Rink ) உலகின் மிக உயர்ந்த இயற்கை ஐஸ்-ஹாக்கி வளையமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 3,484 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த ஐஸ் நீர் கோடைக்காலத்தில் உருகி குளமாக மாறுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய தேசிய பூங்கா மற்றும் பறவை தேசிய பூங்கா இங்குள்ளது. இங்குள்ள ஹெமிஸ் தேசிய பூங்கா ஒரு உயரமான பூங்கா.  இது பனிச்சிறுத்தைக்கு பிரபலமானது. பெரிய திபெத்திய செம்மறி, நீல செம்மறி ஆகியவை இங்கு வாழ்கின்றன.

லடாக் பகுதியில் வாழும் மக்கள் அமைதியை விரும்பினாலும் இங்கு மதம் மாறி திருமணம் செய்வது கொள்வது அவர்களால் ஏற்கமுடியாத ஒன்றாக உள்ளது.

புகழ்ப்பெற்ற சுற்றுலா தலமாக இருக்கும் இந்த பகுதியில் சுற்றுலா செல்லும் போது நீங்கள் தங்குவதற்கென்று தனி ஹோட்டலை தேட வேண்டியதில்லை. அங்கு வாழும் மக்களே அவர்களின் வீட்டில் உங்களுக்கு தங்க இடம் தருவார்கள். அதற்கான வசதிகள் அங்கே உள்ளன.

மார்மாட்(Marmots) என்ற ஒருவகையான அணில் இனத்தை சேர்ந்த விலங்கு லடாக் பகுதியில் மட்டுமே பார்க்க முடியும். இவை பார்க்க சிறியதாகவும் அழகாகவும் இருக்கும்.

லடாக்கில் உள்ள துருக்பா நன்னேறியில் உள்ள வயதானவர்கள் நாட்டுப்புறப் பாடல்களை பாடும் போது பஜாமாக்களை அணிந்து கொண்டு பாடுவார்கள்.

இங்குள்ள சியாச்சென் ராணுவத்தளமானது ஓபி பாபா மடம் என்று அழைக்கப்படுகிறது. மாவ்லன் தாக்குதலை தனி ஆளாக நின்று சமாளித்த ஓபி பாபா என்ற வீரரின் நினைவாக இந்த பெயர் வழங்கப்படுகிறது.

உலகின் மிக நீளமான மலைப்பாதை லடாக்கில் உள்ள கர்துங்கால் பாதை ஆகும்.

உலகின் மிக அதிக உயரத்தில் உப்புநீர் ஏரியாக திகழ்வது லடாக்கில் உள்ள பியாங் ஏரி ஆகும். இங்கு நீர் முழுவதும் உறைநிலையில் இருக்கும்.

லடாக்கின் மக்கள்தொகை வெறும் 2.74 லட்சம் மட்டுமே. இதில் இஸ்லாமிய மக்கள் 47.4 சதவிகிதம் உள்ளனர். மேலும் புத்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் 45.8 சதவிகிதம் வசிக்கின்றனர். இந்துக்கள் வெறும் 6.2 சதவிகிதமே.

லடாக்கின் நிலப்பரப்பளவு 59,196 சதுர கிமீ. இது மிகவும் பெரிய நிலப்பரப்பளவு கொண்ட இடம் ஆகும். அதாவது 1.30 லட்சம் ச.கி.மீ. பரப்பளவைக் கொண்ட தமிழ்நாட்டின் பரப்பில் கிட்டத்தட்ட 45% ஆகும்.

உலகின் மிக உயரமான பாலம் லடாக்கில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5,602 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பெய்லி பாலம் சுரு நதி மற்றும் டிராஸ் நதியைக் கடக்கிறது. 1982 ஆம் ஆண்டில் ராணுவத்தால் கட்டப்பட்ட பாலமாகும்.

இந்தியாவில் லடாக்கில் மட்டுமே சிந்து நதி ஓடுகிறது. இதை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். லே அரண்மனை, பல்வேறு புத்த ஆலயங்கள், ஏரிகள் என இயற்கை அழகு நிறைந்த பகுதியாக லடாக் உள்ளது.

இங்கு சாலை வசதி 1,800 கிலோ மீட்டர் தொலைவுக்குத்தான் உள்ளது. அதிலும் 800 கிமீதான் தார் சாலை.

2019 முதல் சட்டமன்றம் இல்லாத தனி யூனியன் பிரதேசமாக லடாக் பகுதி இயங்கிறது.

உலகின் மிக உயர்ந்த இயற்கை ஐஸ்-ஹாக்கி ரிங்க் லடாக்கில் தான் உள்ளது. இது குளிர்காலத்தில் உறையும் அதனால் இது குளிர்கால விளையாட்டுகளுக்கு உதவுகிறது.

Related posts

Leave a Comment