January 31, 2023
தகவல்

ராஜ நாகம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் !!

உலகில் உள்ள பலவகையான பாம்பு வகைகளை குறித்து கேள்வி பட்டிருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். பாம்பில் 15 குடும்பங்களும் 2900 இனங்களும் உள்ளன. இதுவரை வாழ்ந்த மிக பெரிய பாம்பு இனங்களில் ஒன்றாக டைட்டானிக் போயா உள்ளது. இதன் எடை 1385 கிலோ.

இந்த தொகுப்பில் பாம்பு இனங்களில் ராஜாவாக திகழும் ராஜ நாகம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை குறித்து பார்க்கலாம்.

பறவைகளை போல கூடுகட்டி முட்டை இடும் வழக்கம் கொண்ட ஒரே பாம்பு இனம் ராஜநாகம். இது சுமார் 13 அடி முதல் 22 அடி நீளம் வரை வளரக்கூடியது. இவை மற்ற நாக பாம்புகளை விட அத புத்தி கூர்மை உடையது.

தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் பரவலாக வாழும் ராஜநாகம் விஷத்தன்மையுடன் கூடிய உலகின் மிகவும் நீளமான பாம்பு இனங்களில் ஒன்று. பாம்பு இனங்களிலே மிகவும் கொடியதாக கருதப்படுவதும் இது தான்.

மலைப்பாம்பை ஒத்த நீளம் கொண்ட விஷப்பாம்பாக கருதப்படும் ராஜநாகம் கடித்தால் 80 சதவீதம் இறப்பு நேரிட வாய்ப்பு உண்டு.அடர்ந்த காடுகள் மற்றும் புதர்கள் இருக்கும் இடங்களில் வாழும் இது தமிழகத்தில் அரிதாக காணப்படுகிறது.

குறிப்பாக நாகர்கோவில், மாஞ்சாலைக்காடு, சதுரகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுகிறது மற்றும் கேரளாவின் மலைப்பகுதிகளிலும் பரவலாகவும் காணப்படுகிறது.

ராஜநாகம் என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் இது நாக இனத்தை சார்ந்தது அல்ல. இதன் அறிவியல் பெயர் ஓபியோபாகஸ் ஹன்னா என்பதாகும்.

ராஜநாகத்தின் தலை அதன் உடம்பிற்கு ஏற்றவாறு பெரியதாகவும், அதன் கழுத்தின் அடிவாரத்தில் ஓரே நிறத்திலான இணைப்பு செதில்களும் இருக்கின்றன.

ராஜநாகங்கள் பெரும்பாலும் பிற பாம்புகளை உணவாக உட்கொள்கின்றது. அது கிடைக்காத பட்சத்தில் பல்லிகள், பறவைகள், சிறு விலங்குகள், மீன்கள், ஓணான் உள்ளிட்டவைகளை உணவாக உட்கொள்கின்றன.

மற்ற பாம்புகளை போலவே ராஜநாகவும் தனது இரைகளை அதன் வாசனையை வைத்து அறிகிறது. இரையின் மீதான வாசனையை உணர்ந்த பின் இரை எங்குள்ளது என்பதை துல்லியமாக அறிந்துக்கொள்கிறது.

அதிக பார்வைத்திறன் கொண்ட ராஜநாகம் சுமார் 300 அடிக்கும் அப்பால் உள்ள இரையின் அசைவக்கூட அறியும் திறன் கொண்டது.

மற்ற பாம்புகளை போலவே ராஜநாகத்திற்கு நான்கு புறமும் வாய் தசைகள் விரியும் அமைப்பு உள்ளதால் அதன் மூலம் இரையை ஒரே முறையில் விழுங்கிவிடும். ராஜநாகத்தின் வாய் தசைகள் அதன் தலையை காட்டிலும் விரியும் தன்மை கொண்டவை.

ஒருமுறை உணவு உட்கொண்டால் அதன் பிறகு பல நாட்கள் வரை உணவு உட்கொள்ளாமல் உயிர் வாழும் தன்மைகொண்டவை. இதன் எதிரி கீரி. இரவு நேரங்களில் இது இரையை தேடும் போது ஒரு வித முத்தை வெளியிட்டு அந்த முத்திலிருந்து கிடைக்கும் வெளிச்சத்தில் இரை தேடுகிறது.

இவை இணை சேரும் சமயத்தில் இணையை கண்டு பிடிப்பதற்காக ஒரு வித வாசனையை வெளி விடும். ஆண் பெண் இரு பாம்புகளுமே புளுகு வாசனையை வெளிவிடும்.

கிராமத்தில் உளுந்து வாசம் வந்தாலே நாக பாம்பு இருப்பதாக கூறுவார்கள். மேலும் அது இணை சேர்ந்த பிறகு முட்டையிட்டு 2மாதம் களித்து ராணி நாகம் குஞ்சுகளை பொரிக்கும்.

சுமார் 20 முதல் 40 முட்டைகள் வரை இடும். இது போடக்கூடிய முட்டைகளையும் ராணி நாகத்தையும் ஆண் நாகம் பாதுக்காக்கும்.20 ஆண்டுகள் வரை வாழ்நாட்களை கொண்ட ராஜநாகங்கள் பொதுவாக மூங்கில் காடுகளில் வாழ்கின்றன.

தனது இரையை தவிர பிறரை தாக்காத ராஜநாகங்கள் இதனை எதிர்த்து எதிரிகள் அதன் வழியில் வந்தால் தன்னை தற்காத்துக்கொள்ள தனது உடல் நீளத்தில் பாதிக்கும் மேல் உயர்த்திக்கொள்கிறது.

பின் படம் எடுத்துக்காட்டி சீற்றத்துடன் எதிரிகளை பயமுறுதுகின்றது. அதனையும் தாண்டி நெருங்கும் எதிரியை தாக்கி எதிரியின் உடலில் கொடிய விஷத்தை கக்குகிறது.

ராஜநாகத்தின் விஷம் மிக மிக ஆபத்தானது ஒரே கடியில் மனிதனை கொல்லும் ஆற்றல் கொண்டது. ராஜநாகம் கடித்த சில நொடிகளில் மனிதன் கோமோ நிலைக்கு சென்று மரணத்தை சந்திக்கிறான்.

ஆப்ரிக்காவில் இருக்கும் பிளாக் மாம்பாவை காட்டிலும் 5 மடங்கு அதிக விஷத்தை கக்கும். ராஜநாகம் கடித்தால் ஒரு யானையே சில மணி நேரத்தில் உயிர் இழந்துவிடும்.

ராஜநாகத்தின் விஷம் குறைந்த அளவு நச்சுத்தன்மை கொண்டது என்றாலும் அது எதிரியை ஒருமுறை கடிக்கும் போது கிட்டதட்ட 6 முதல் 7 மில்லி லிட்டர் விஷத்தை செலுத்திவிடுகிறது. அதனால் உயிரிழப்புகள் அதிக அளவில் உள்ளன.

இதுவரை ராஜ நாகம் கடித்து ஒருவர் தான் உயிர் பிழைத்துள்ளார். அவர் இது குறித்து ஆராய்ச்சி செய்யும் போது இந்த பாம்பு கடித்தால் அது கடித்த ஒரு நிமிடத்தில் எதிர் நஞ்சு செலுத்த பட வேண்டும். இல்லையென்றால் ஆபத்து தான் என்று கூறியுள்ளார்.

இந்தியா, இந்தனோசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் ராஜநாகம் பற்றிய ஆய்வுகள் நடந்து வருகிறது. ராஜநாகத்தின் விஷத்தை முறிக்கும் மருந்தை தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கண்டுப்பிடித்து உள்ளது.

இருந்தாலும் இந்த மருந்து கிடைப்பது மிகவும் கடினம் என்பதால் இந்த பாம்பினால் கடிபடும் பலரும் இறக்க நேரிடுகிறது.

Related posts

Leave a Comment