அழகான வண்ணமயமான கண்ணைக் கொள்ளை கொள்ளும் சிறகுகளைக் கொண்ட வண்ணத்துப்பூச்சிகளை பற்றிய ஒரு சில சுவாரஸ்யமான தகவல்களை பற்றி பார்க்கலாம். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் வகை வண்ணத்துப் பூச்சி இனங்கள் உள்ளதாம். இந்த வண்ணத்துப் பூச்சிகள் ஒரு சில வாரங்கள் மட்டுமே உயிர் வாழ்கின்றன.
ஒரு வயது வந்த பட்டாம்பூச்சியின் சராசரி ஆயுட்காலம் சுமார் மூன்றிலிருந்து நான்கு வாரங்கள். வண்ணத்துப்பூச்சியின் மொத்த வாழ்க்கை சுழற்சியும் 2 லிருந்து 8 மாதங்கள் வரை நீடிக்கும். ஒரு பட்டாம் பூச்சியின் வாழ்க்கை சுழற்சி நான்கு நிலைகளில் இருக்கும். முதலில் முட்டை அதன் பிறகு கம்பளிப்பூச்சி அதன் பிறகு கூட்டுப்புழு அதன் பிறகு வயது வந்த பட்டாம்பூச்சி.
சுமார் இருபத்தி நான்கு மணி நேரம் மட்டுமே வாழக்கூடிய பட்டாம்பூச்சி இனமும் உள்ளது. அது போல எட்டு மாதங்கள் வரை உயிர் வாழக் கூடிய பட்டாம்பூச்சிகளும் உள்ளது. பிரிம்ஸ்டோன் பட்டாம்பூச்சி (Gonepterix rhamni) பட்டாம்பூச்சிகளில் மிக நீண்ட ஆயுட்காலம் கொண்டது. இது ஒன்பதிலிருந்து பத்து மாதங்கள் உயிர் வாழ்கிறது.
மிகப்பெரிய பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்று ஜெயண்ட் ஸ்வாலோடெயில் பட்டாம்பூச்சி (Giant Swallowtail Butterfly). இந்த பட்டாம்பூச்சியின் இறக்கைகள் நான்கிலிருந்து ஏழு அங்குலங்கள் வரை விரிவடைந்து காணப்படும். வண்ணத்துப் பூச்சிகள் சிறிய அளவில் எட்டில் ஒரு பங்கு அங்குலத்தில் இருந்து கிட்டத்தட்ட 12 அங்குலம் வரை இருக்கும்.
வண்ணத்துப்பூச்சிகள் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
3,200 கிலோ மீட்டர்கள் தூரம் வரை பயணிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. மோனார்க் பட்டாம்பூச்சிகள்(Monarch butterflies) கிரேட் லேக்ஸிலிருந்து மெக்சிகோ வளைகுடாவிற்கு சுமார் 3,200 கிலோ மீட்டர்கள் தொலைவில் பயணம் செய்து வசந்த காலத்தில் மீண்டும் வடக்கே திரும்புகின்றன. குளிரில் இருந்து தப்பிக்க வெப்பமான காலநிலையைத்தேடி இந்த பட்டாம்பூச்சிகள் இடம் பெயர்கிறது.
பட்டாம்பூச்சிகள் பறப்பதற்கு வெப்பம் தேவை. குளிர்ச்சியாக இருந்தால் பட்டாம்பூச்சிகளால் பறக்க முடியாது. வண்ணத்துப் பூச்சிகளின் உடல் வெப்பநிலை 86 டிகிரிக்கு குறைவாக இருந்தால் வண்ணத்துப்பூச்சிகளால் பறக்க முடியாது. வண்ணத்துப்பூச்சிகள் பறப்பதற்கு ஏற்றவகையில் சிறகுகளை வெப்பமாக்குவதற்கு சூரிய ஒளியில் ஓய்வெடுக்கும். மிகவும் குளிராக இருந்தால் வண்ணத்துப்பூச்சி அசையாமல் ஓரிடத்தில் அப்படியே இருக்கும்.
3,500 ஆண்டுகள் பழமையான தீப்ஸில்(Thebes) உள்ள எகிப்திய ஓவியங்களில் பட்டாம்பூச்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஒருசில வண்ணத்துப் பூச்சிகளுக்கு சாப்பிடுவதற்கு வாய் இருக்காது. இந்த வண்ணத்துப் பூச்சிகள் கம்பளி பூச்சிகளாக இருக்கும் பொழுது சேமித்து வைத்திருக்க கூடிய ஆற்றலில் உயிர் வாழ்கிறது.
பட்டாம்பூச்சிகள் முட்டைகளை செடிகளின் இலைகளில் போடும். இப்படி பட்டாம்பூச்சிகள் செடிகளில் முட்டை இடுவதற்கு முன்பு அதன் கால்களால் இலைகளை ருசி பார்த்து அந்த இலைகள் கம்பளிப் பூச்சிகள் வளரும் பொழுது அதற்கு உணவளிக்க அந்த இலைகள் போதுமானதாக இருக்குமா என்பதை பார்த்து அதன் பிறகு முட்டை இடுகிறது. கம்பளி பூச்சிகள் சாப்பிடாத செடிகளில் உள்ள இலைகளில் பட்டாம்பூச்சிகள் முட்டையிடாது.
பட்டாம்பூச்சிக்கு இரண்டு இறக்கைகள் உள்ளது என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. பட்டாம்பூச்சிக்கு நான்கு இறக்கைகள் உள்ளது.
உலகின் மிகப்பெரிய பட்டாம்பூச்சி பெண் ராணி அலெக்ஸாண்ட்ரா பேர்ட்விங்(female Queen Alexandra’s birdwing). இதன் இறக்கைகள் 25 சென்டிமீட்டர் இருக்கும்.
மிகச்சிறிய பட்டாம்பூச்சி வெஸ்டர்ன் ப்ளூ பிக்மி(Western Blue Pigmy) ஆகும். இது 2 சென்டிமீட்டர் குறுக்களவு கொண்டது.
பல வளர்ந்த வண்ணத்துப்பூச்சி இனங்கள் தங்கள் கழிவுகளை வெளியேற்றுவது இல்லை. வண்ணத்துப்பூச்சிகள் சாப்பிடக்கூடிய எல்லாவற்றையும் ஆற்றலாக மாற்றி பயன்படுத்துகிறது.
ஒரு சில வகை பட்டாம்பூச்சிகள் விலங்குகளின் காயங்களில் இருந்து வரக்கூடிய ரத்தத்தை குடிக்கின்றன.
வண்ணத்துப்பூச்சிகள் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வண்ணத்துப்பூச்சிகளின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.