September 28, 2022
செல்வம்

இந்த ஒரு தீபம் உங்கள் வீட்டில் மிகப்பெரிய யாகம் செய்த பலனை தரும் தெரியுமா ?

மிகப்பெரிய யாகத்தை செய்த பலனை கொடுக்கும் ஒரு விளக்கேற்றும் முறை. கேட்க அதிசயமாக இருக்கும் ஆனால் அதுதான் உண்மை. அப்படி மிகப்பெரிய பலனை கொடுக்க கூடியது பஞ்ச கவ்ய விளக்கு.

இந்த பஞ்ச கவ்ய விளக்கானது பால்,தயிர்,நெய்,கோமியம், சாணம் இவைகளை கொண்டு செய்யப்பட்டது. உங்களால் முடிந்தால் நீங்கள் இந்த பொருட்களை கொண்டு உங்கள் வீட்டிலேயே பஞ்சகவ்ய விளக்கை செய்து ஏற்றலாம்.

அப்படி முடியாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விளக்கை வாங்கி வைத்து விளக்கேற்றலாம். இந்த விளக்கை வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஏற்றலாம்.

வெள்ளிக்கிழமையன்று உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து சுத்தம்செய்து, சிறிது பன்னீர் தெளித்து, நன்றாக துடைத்துவிட்டு அரிசி மாவை கொண்டு கோலம் போட்டு, காவி தீட்டி, ஒரு தாம்பூலத்தின் மேல் பஞ்சகவ்ய விளக்கை வைத்து அதில் நிரம்ப நெய் ஊற்ற வேண்டும்.

கண்டிப்பாக நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் திரி போட்டு விளக்கை ஏற்ற வேண்டும். தீபம் எரிந்த பிறகு விளக்கை அணைக்க கூடாது. தீபத்தோடு அந்த பஞ்சகவ்ய விளக்கும் ஹோமம் போல எரிந்து சாம்பலாகும் வரை அப்படியே விட்டு விட வேண்டும்.

எரிந்த அந்த சாம்பலை தினம்தோறும் நெற்றியில் போட்டு கொள்வது நல்ல பலனை தரும். இந்த ஹோமம் லட்சுமி நாராயண பூஜை செய்ததற்கு சமமாக சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. இந்த தீபத்தை ஏற்றிய பிறகு முடிந்தால் ஏதாவது பிரசாதம் செய்து இறைவனுக்கு நைவேத்யமாக படைத்து குழந்தைகளுக்கு பிரசாதமாக கொடுக்கலாம்.

யாகம் செய்த புண்ணியத்தோடு அன்னதானமும் செய்ய மிகசிறந்த பலனை தரும்.

Related posts

Leave a Comment