நம் அனைவருக்கும் கனவுகள் வரும் என்றாலும், தூங்கும் போது சில கனவுகள் வருவது மிகவும் ஆபத்தாகவும், சில கனவுகள் வருவது மிகவும் சுபமாகவும் அமையும் என்று நம்முடைய முன்னோர்கள் வழிவழியாக வாஸ்து மற்றும் கனவு சாஸ்திரம் படி கூறுகின்றனர்.
அதேபோன்று, திருமணமானவர்களுக்கு அவர்களின் மனைவி, கணவர் தவிர்த்து அடிக்கடி வேறொரு நபருடன் காதல் உறவு இருப்பது போல் கனவுகள் வந்து கொண்டுருந்தால், அவர்களுக்கு தாம்பத்திய வாழ்கையில் பிரச்சனை உள்ளது என்று பொருள். எனவே, தம்பதியினர் தங்களுக்கு இடையேயான உறவு சிக்கலை வெளிப்படையாக பேசி சரி செய்து விட வேண்டும்.
திருணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி கேட்டிருப்போம். ஆனால், இன்றைய காலத்து திருமணங்களில் பெரும்பாலும், சண்டை, சச்சரவுகள் மன குழப்பங்கள் போன்றவை அதிகரித்து காணப்படுகிறது. இவை ஆண், பெண் ஆகிய இருவரையும் வேறொரு உறவில் கொண்டு செல்கிறது.
உங்கள் உறவில் இறுதி வரை காதல் இருக்க நீங்கள் பல விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். நீங்களும் உங்கள் துணையையும் உணர்ச்சி அல்லது உணர்வு ரீதியிலான தொடர்பை வளர்த்துக் கொள்ளவும், ஒருவருக்கொருவர் மேலும் பிணைந்திருக்கவும் முயற்சி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நாளும் உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும், ஏனெனில், ஒரு நபர் தங்கள் பாதுகாப்பைக் குறைத்து, அவர்களுக்குத் தேவை என்று காட்டும்போது,அவரது துணையின் அன்பு மேலும் அதிகரிக்கிறது.
தகவல் தொடர்பு உறவில் மிக முக்கியம். அவை சரியாக இல்லாத பட்சத்தில் உறவில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இடைவெளி காரணமாக தம்பதிகள் இடவே வேறொரு நபர் வந்து உறவுகள் சிக்கலாகிவிடுகின்றன.
ஒவ்வொரு உறவிலும் ஏற்ற தாழ்வுகள் உள்ளன, இருப்பினும், சிக்கல்கள் நீண்ட காலமாகத் தீர்க்கப் படாமல் இருக்கக்கூடாது. முடிந்தவரை உறவில் உள்ள பிரச்சனைகளை விரைவாக சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.