கொரோனாவால் இன்டர்நெட் வேகம் குறையுமா?

கொரோனா பீதி உலகை ஆட்டிப்படைத்து வரும் நிலையில் வீட்டுக்குள் முடங்கியுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனவே பொழுதுபோக்கிற்காக இணைய தளத்தையே பெரிதும் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டிலிருந்தே அலுவலக பணி புரிவதற்கும் இணைய தளம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதிகரித்து வரும் டேட்டா தேவையை சமாளிக்க நெட்ஃப்ளிக்ஸ் , ஹாட்ஸ்டார் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஒளிபரப்புகளின் காட்சித் தரத்தை குறைக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்படுகின்றன.

வரும் ஏப்ரல் 14 வரை 480 பிக்சல் என்ற காட்சித் தரத்தை மட்டுமே தங்கள் ஒளிபரப்புகள் கொண்டிருக்கும் என யூ டியூப் அறிவித்துள்ளது. அடுத்து வரும் வாரங்களில் இணைய தளத்தின் வேகம் மேலும் குறையக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *