கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் உணவு தான் அவர்களது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அதிகமான ஊட்ட சத்துக்களை கொடுக்கும்.
முட்டை நம் அன்றாட உணவுகளில் ஒன்று. முட்டையில் புரதம், வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் பி 6, கால்சியம், துத்தநாகம் மற்றும் செலினியம் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் முட்டை சாப்பிடுவது மிகவும் நல்லது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் தினமும் முட்டையை வேகவைத்து சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்., மேலும் குழந்தையை ஆரோக்கியமான முறையில் பெற்றெடுக்கலாம்.
இருப்பினும் சில கட்டுப்பாடுகளுடன் கர்ப்பிணி பெண்கள் முட்டைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது. அது குறித்து இந்தப்பதிவின் மூலம் நாம் பார்க்கலாம்….
முட்டையில் தாதுக்கள், வைட்டமின்கள் நிறைந்திருப்பதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டால் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் தாய்க்கும் குழந்தைக்கும் கிடைக்கும். ஆதலால் தினமும் ஒன்று முதல் இரண்டு முட்டைகள் வரை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம்.
முட்டையில் கோலின் அளவு நிறைந்து காணப்படுகிறது. இது வயிற்றில் உள்ள கருவின் மூளையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இது குழந்தைக்கு வரும் பல நோய்களைத் தடுக்கிறது.
ஆனால் மஞ்சள் கருவில் சுமார் எழுபது கலோரிகள் உள்ளதால் மஞ்சள் கரு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
முட்டைகளை தொடர்ந்து சாப்பிடு வந்தால் உடலில் உள்ள கொழுப்பின் அளவை சமன் செய்யயும். உங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை பொறுத்து முட்டையை தினசரி உண்ணலாம்.
கொலஸ்ட்ரால் அளவு சாதாரணமாக இருந்தால் வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முட்டைகள் வரை சாப்பிடுவது மிகவும் நல்லது.
கர்ப்ப காலத்தில் வேகவைத்த முட்டைகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இது முட்டையில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றும்.
ஆனால் அதே நேரம் கர்ப்ப காலத்தில் ஒரு போதும் பச்சை முட்டை சாப்பிடக்கூடாது. முட்டைகளை வைத்து பல வகையான ரெசிபிகளை சமைத்து சாப்பிடலாம். ஆனால் தவறியும் கூடப் பச்சை முட்டை சாப்பிட்டு விடாதீர்கள்.
பச்சை முட்டை சாப்பிடுவதால் கருக்கலைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை பன்மடங்கு அதிகரிக்கிறது. இது தவிர, கெட்டுப்போன அல்லது ஏற்கனவே உடைந்த முட்டைகளை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். இது கர்ப்ப காலத்தில் தொற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
கர்ப்ப காலத்தில், காலை உணவுடன் முட்டை சேர்த்து சாப்பிட முயற்சி செய்யுங்கள். காலை நேரத்தில் வளர்சிதை மாற்றம் மிக அதிகமாக இருக்கும். இந்நிலையில் காலை உணவில் முட்டை சாப்பிடுவதால் அஜீரண பிரச்சனை வராது. எனவே, காலை உணவில் முட்டை சேர்த்துக்கொள்வதே மிக சிறந்தது.