November 27, 2022
ஆன்மீகம்

அர்ச்சகர் தரும் பிரசாதங்களை கோவிலில் வைத்து செல்வது சரியானதா?

பழங்கால முதலே ஆன்மீகத்தில் சில பழக்க வழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். அவற்றில் சிலவற்றை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கோவிலுக்கு செல்லும்போது தெய்வத்திற்கு பூஜை செய்வதற்கு கையில் ஏதாவது பொருளை எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி கொண்டு செல்வது உங்களது வெறுமையை போக்கும்.

நீங்கள் கோவிலுக்கு செல்லும் போது அங்கிருக்கும் தெய்வத்தை நேருக்குநேர் நின்றுகொண்டு வணங்கக் கூடாது. பக்கவாட்டில் நின்று கொண்டுதான் வணங்க வேண்டும்.

அஷ்டமி, நவமி நாட்களில் வெளியே செல்லும் போது துளசி செடியை மூன்று முறை சுற்றி அதை வணங்கிச் சென்றால் நினைத்த காரியம் நடக்கும்.

நீங்கள் உப்பு வாங்கும் போது வெள்ளிக்கிழமைகளில் வாங்கினால் வீட்டில் செல்வம் எப்போதும் சேர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் உப்பை தவிர மளிகை பொருட்களை மற்ற நாட்களில் வாங்குவது சிறந்தது.

கஸ்தூரிமஞ்சள், கற்பூரம், ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வீட்டில் தெளிக்க நல்ல சக்தி உண்டாகும். அதேபோல் எலுமிச்சை, பூசணிக்காய் கொண்டு இந்த நாட்களில் திருஷ்டி கழிக்க கெட்ட சக்திகள் அகலும்.

செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி நாட்களில் வீட்டில் குத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது மிகுந்த ஆசீர்வாதத்தை தரும்.

உப்பு, வெந்தயம், கருப்பு எள் ஆகியவற்றை சிறிது இடித்து அதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வீட்டின் கன்னி மூலையில் அதாவது தெற்கு மூலையில் வைத்து விட்டால், வரவேண்டிய பணம் விரைவில் வந்து சேரும். 4 மாதங்களுக்கு ஒருமுறை வெள்ளைத்துணியை பிரித்து மாற்றிக் கொண்டால் போதும்.

ஆலயத்தில் ஒருவர் ஏற்றியிருக்கும் விளக்கில் இருந்து நெருப்பு எடுத்து தீபம் ஏற்றக்கூடாது. அப்படி உங்களிடம் நெருப்புப்பெட்டி இல்லையென்றால் ஆலயத்தின் விளக்கில் இருந்து நெருப்பு எடுத்து தீபம் ஏற்றலாம்.

வீட்டிற்கு வருபவர்களுக்கு வந்தவுடன் குங்குமம் கொடுப்பது சிறந்தது. ஆனால் வந்தவர்கள் வெளியே செல்லும்போது கொடுத்தால் நம் வீட்டின் சக்தி அவர்களுடன் சென்று விடுமாம்.

செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வீட்டில் மாவிலை தோரணம் கட்டினால் கெட்ட சக்திகள் வீட்டில் வராது.

கோவிலில் அர்ச்சகர் தரும் குங்குமம், மஞ்சள், சந்தனம், விபூதி, பூ போன்ற பொருள்களை கோவிலிலேயே கொட்டி வைப்பது தவறானது.

Related posts

Leave a Comment