August 18, 2022
சினிமா

லெஜண்ட் சரவணனுக்கு போட்டியாக சினிமாவில் அல்ட்ரா லெஜண்டாக களமிறங்குகிறாரா கிரண்குமார்…! ?

விளம்பரங்களில் நடிகர், நடிகைகள் நடித்தால்தான் மக்கள் ரசிப்பார்கள் என்கிற டிரெண்ட் தற்போது மாறிவிட்டது. இதனை முதலாவதாக உடைத்தெறிந்தவர் லெஜண்ட் சரவணன்.

இவர் தனது கடையான சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் தானே நடித்து புது டிரெண்டை உருவாக்கினார். இதை மற்ற பெரிய தொழிலதிபர்களும் பின்பற்றத் தொடங்கினர்.

அவ்வாறு பிரபலமானவர் தான் கிரண்குமார். நகைக்கடை நடத்தி வரும் இவர் தனது கடைக்கான விளம்பரங்களில் தானே நடித்து வருகிறார். சமீபத்தில் லெஜண்ட் சரவணன் சினிமாவில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். அவர் நடித்த லெஜண்ட் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் ரிலீசானது முதல் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதையெல்லாம் பற்றி கவலைப்படாத லெஜண்ட் சரவணன் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அப்படம் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே லெஜண்ட் சரவணனுக்கு போட்டியாக பிரபல நகைக்கடை உரிமையாளரான கிரண்குமாரும் சினிமாவில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவி வந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் லெஜண்ட் சரவணனுக்கு போட்டியாக அல்ட்ரா லெஜண்டாக களமிறங்க இருப்பதாக சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில், அதுகுறித்து கிரண்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, தனக்கு சினிமாவுக்கு வரும் எண்ணம் சுத்தமாக இல்லை என கூறி உள்ளார். மேலும் தன்னால் நடனம் எல்லாம் ஆட முடியாது என்றும், தற்போது இருக்கும் இடமே தனக்கு போதும் என்றும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கிரண்குமார்.

Related posts

Leave a Comment