November 27, 2022
உடல்நலம்

உங்களுக்கு கால்சியம் குறைபாடு உள்ளதா? இதை சாப்பிடுங்க

நமது உடலில் கால்சியம் குறைபாடை எப்படி கண்டுபிடிப்பது என்று பார்த்தால் நமது உடலில் எலும்புகளில் வலி ஏற்படும். கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு கை, கால்களை மடக்கும் போதெல்லாம் ஒரு சத்தம் ஏற்படும், வலி ஏற்படும் இந்த மாதிரியாக இருந்தால் நமக்கு கால்சியம் குறைபாடு உள்ளது என்று அர்த்தம். இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்குமே இந்த கால்சியம் குறைபாடு காணப்படுகிறது.

கால்சியம் குறைபாட்டால் நமக்கு உடல் சோர்வு, முடி கொட்டுதல், மன அழுத்தம் மற்றும் பார்வை குறைபாடு போன்ற பல பிரசினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த கால்சியம் குறைபாட்டிலிருந்து விடுபட வீட்டிலே இருந்த படியே நாம் எளிய முறையில் ஒரு மாதத்திலேயே இதற்கு தீர்வு காணலாம்.

பாதாம்:
தினமும் 4 பாதாம் எடுத்து 3 மணிநேரம் தண்ணீரில் ஊற வையுங்கள். ஊறிய பின் அதன் தோலை உரித்து விட்டு, 1 டம்ப்ளர் பாலில் போட்டு குடிக்க வேண்டும். இதனை தினமும் காலையில் சாப்பிட்ட பின் குடிக்க வேண்டும்.

எள்ளு:
4 ஸ்பூன் அளவிற்கு எள்ளு எடுத்து கொள்ள வேண்டும். இதில் கருப்பு எள்ளு மற்றும் வெள்ளை எள்ளு உள்ளது. கருப்பு எள்ளை விட வெள்ளை எள்ளு நல்லது. இதனுடன் 2 ஸ்பூன் அளவிற்கு வெல்லம் சேர்த்து கொள்ள வேண்டும். இவை இரண்டையும் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவேண்டும். இதிலிருந்து ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து ஒரு டம்ப்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கலாம். நாம் குழந்தைகளுக்கும் தினமும் ஒரு சிறிய உருண்டை வீதம் கொடுக்கலாம். இதிலே வெல்லம் சேர்த்ததால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை மாலையில் சாப்பிட வேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கால்சியம் குறைபாடு முற்றிலும் குணமாகும்.

இதற்கு ஒரு வாரத்திலேயே தீர்வு கிடைக்கும். இருந்தாலும் ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். கால்சியம் குறைபாட்டிலிருந்து நிரந்தர தீர்வு பெறலாம்.

Related posts

Leave a Comment