வேலைகள்

எல்ஐசி-யில் 8,000 அதிகமான வேலை வாய்ப்புகள்.. இளைஞர்களே உசார்!!!

அரசு வேலையில் பணியாற்ற வேண்டும் என பல லட்சம் பேர் தயாராகி வருகின்றனர். அவ்வப்போது மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்படும் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பின் மூலம் சில ஆயிரம் பேர் பயனடைவதும் உண்டு.

அந்த வகையில் மத்திய அரசிற்கு உட்பட்டு இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 8 அயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நாடு முழுவதும் எல்ஐசி கிளைகள் விரிந்துள்ள நிலையில் தற்போது வடக்கு மண்டலம், வடக்கு மத்திய மண்டலம், கிழக்கு மண்டலம், கிழக்கு மத்திய மண்டலம், மத்திய மண்டலம், தெற்கு மண்டலம், தெற்கு மத்திய மண்டலம், மேற்கு மண்டலம் என மொத்தம் 8 மண்டலங்கள் வாரியாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் தெற்கு மண்டலத்தின் கீழ் சென்னை 1 மற்றும் 2, கோயம்புத்தூர் (கோவை), மதுரை, சேலம், தஞ்சாவூர், எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு, திருவனந்தபுரம், திருச்சூர், திருநெல்வேலி, வேலூர் ஆகியவற்றுக்கு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாவட்டங்கள் வாரியான பணியிடங்கள் குறித்த முழு விபரங்களுக்கு எல்ஐசி-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.தற்போது எல்ஐசி சார்பில் வெளியிடப்பட்டுள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.14,435 முதல் ரூ.40,080 வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இத்தேர்வானது முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

இவை அனைத்திலும் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதார்கள், தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.விண்ணப்பதாரர் செப்டம்பர் 1, 2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.50 ஆகும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகச் செலுத்த வேண்டும். மேலும், பணப்பரிமாற்ற சேவைக்குக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படும்.

இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://licindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து, வரும் 1 அக்டோபர் 2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதிவு தொடங்கும் நாள் : 17 செப்டம்பர் 2019
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 1 அக்டோபர் 2019
தேர்வு நுழைவுச் சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்படும் நாள் : 15 அக்டோபர் முதல் 22 அக்டோபர் 2019 வரை
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் : 21, 22 அக்டோபர் 2019
முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள் : பின்னர் அறிவிக்கப்படும்.

Related posts

Leave a Comment