June 11, 2023
வேலைகள்

மத்திய நீர்வளத்துறையில் வேலை வாய்ப்பு – பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஜல்சக்தி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மத்திய நீர்வளத்துறையில் டிரைவராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வேலைக்கு இருப்பத்திஆறு பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

பத்தாம் வகுப்புத் தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற பதினெட்டு முதல் இருபத்தியேழு வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் மோட்டார் மெக்கானிக் பிரிவில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

வேலைக்கான விவரம்:

நிறுவனம் – மத்திய நீர்வளத்துறை

வேலையின் பெயர் – Staff Car Driver(ordinary Grade)

காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை – 26

வயது விவரம் – 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி – பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிக் பிரிவில் அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம் – மாதம் ரூ.19,900 சம்பளம்

விண்ணப்பிக்க கடைசி தேதி – 22/08/2022

விண்ணப்ப முறை – www.cgwb.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கீழே முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதற்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் – விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

www.davp.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல், விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Regional Director,
CGWB, Central Region, N.S.Building,
Opp.Old VCA, Civil Lines,
Nagpur – 440 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Related posts

Leave a Comment