November 27, 2022
செல்வம்

இதை மட்டும் செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் பணம் பெருகும்

நம்முடைய தேவைகள் நிறைவேறி நாம் சந்தோஷமாக இருப்பதற்கு எப்பொழுதும் நம்மிடம் பணமும், செல்வமும் இருக்க வேண்டும். பணம் நம்மிடம் இல்லாத பொழுது நாம் எந்த ஒரு செயலையும் சந்தோஷமாக செய்ய முடியாது. கையில் இருக்கக்கூடிய பணம் நம்முடைய முக்கிய தேவைகளுக்கு மட்டுமே இருக்கும். ஆனால் மற்ற தேவைகளுக்கு நம்மால் பணத்தை செலவிட முடியாது. இதனால் மிகவும் கஷ்டப்படுவோம்.

சில நேரங்களில் நாம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அந்த பணமானது நம்மிடத்தில் தங்காது. ஏதாவது ஒரு வழியில் செலவழிந்து கொண்டே இருக்கும். செல்வம் எந்த வகையிலும் நம்மை சேராது. ஏதாவது ஒரு விதத்தில் நாம் கடினப்பட்டு, கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்தாலும் அது நம்மை அறியாமல் மிக வேகமாக செலவாகிவிடும். பணம் நம்முடைய கையில் இருப்பது போல் இருக்கும்.

ஆனால் எங்கிருந்து செலவுகள் வருகிறது என தெரியாது. மிக வேகமாக கையிருப்பு கரைந்து விடும். இதனால் சில நேரங்களில் நம்முடைய தேவைகளுக்கு பணம் இல்லாமல் பிறரிடம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்படி கடன் வாங்கிய பிறகு பணம் கைக்கு வந்தவுடன் முதலில் கடனை அடைத்து விடுவோம். மீண்டும் நம்முடைய கையில் பணம் இருக்காது. இப்படி பலருடைய வாழ்க்கையில் இந்த பணக்கஷ்டமானது மிகப்பெரிய ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது.

இவ்வளவுக்கும் இவர்கள் சம்பாதிக்காமல் இல்லை நன்றாக சம்பாதிப்பார்கள். ஆனால் அந்த பணமானது அவர்களுடைய தேவைக்கு மட்டுமே இருக்கும். சில நேரங்களில் ஏதாவது ஒரு வகையில் கடனில் சிக்கி இருப்பார்கள். அந்த கடனில் இருந்து அவர்களால் மீண்டு வெளியே வர முடியாது. சம்பாதிக்கும் பணம் பெரும்பாலும் வட்டி செலுத்துவதற்கும் கடனை அடைப்பதற்கும் மட்டுமே சரியாக இருக்கும்.

அதன் பிறகு நமக்கு தேவையான எந்த செலவுகளாக இருந்தாலும் அதை செய்ய முடியாமல் தவிப்போம். இப்படி பணம் நம்முடைய கையில் சேராமல் தொடர்ந்து நாம் கஷ்டத்தில் இருக்கும் பொழுது இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்தால் போதும். மிகப்பெரிய அளவில் உங்களுக்கு கையில் தேங்காமல் இருக்கக்கூடிய பணம் வரும் நாட்களில் தொடர்ந்து உங்களுக்கு பிரச்சனை இல்லாமல் கையில் இருக்கும்.

இதற்கு மிகவும் எளிமையான ஒரு வழி முறைதான் இது. எல்லோருடைய வீடுகளிலும் லவங்கப்பட்டை காணப்படும். இந்த இலவங்கப்பட்டை பணவரவை அதிகரிக்க கூடிய ஒரு பொருள். பணத்தை நன்றாக ஈர்க்கக் கூடிய சக்தி இந்த லவங்கப்பட்டை உண்டு. நீங்கள் பண பிரச்சனையில் இருந்து வெளியே வருவதற்கு ஒரு இலவங்கப்பட்டை குச்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு விரல் அளவிற்கு இருக்கக்கூடிய இலவங்கப்பட்டை குச்சியை எடுத்து அதை ஒரு முக்கால் அளவிற்கு இரண்டாகக் கிழித்து ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து அந்த லவங்கப்பட்டையின் இடையில் செருகி நன்றாக சுற்றி நீங்கள் பொதுவாக பணம் வைத்திருக்கக்கூடிய பெட்டி அல்லது எங்கு நீங்கள் பணம் வைத்திருப்பீர்களோ அங்கே இதை வைத்து விடுங்கள். இப்படி நீங்கள் வைத்திருக்கும் பொழுது ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய வீட்டில் பணம் பெருக தொடங்கும்.

தேவையில்லாத செலவுகளும் குறையத் தொடங்கும். பணத்திற்கான பிரச்சனை மிக விரைவிலேயே உங்களுக்கு தீரும். இது ஒரு மிக எளிமையான வழிமுறை. இதை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். கண்டிப்பாக இது நல்ல மாற்றத்தை தரக்கூடிய ஒன்று.

Related posts

Leave a Comment