August 18, 2022
சினிமா

இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடிப்பதை உறுதி செய்தார்…!

பிரபல தென்னிந்திய முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால் சமீபத்தில்தான் தாயானார். மகப்பேறு இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டார்.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் சமூக ஊடகம் மூலம் பேசிய காஜல் அகர்வால், தான் இந்தியன் 2 வில் தொடர்வதை உறுதி செய்துள்ளார். அதோடு படப்பிடிக்கு செப்டம்பர் பதிமூன்றாம் தேதி துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். “இந்தியன் 2” படத்தில் நடிப்பதை உறுதி செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் காஜல் அகர்வால்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் எப்போது புத்துயிர் பெறும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. “இந்தியன் 2” படத்தில் காஜல் அகர்வால் வயதான பெண்ணாக நடிக்கிறார்

மேலும் சித்தார்த், ராகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோரும் நடிக்கின்றனர். மறைந்த நடிகர் விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோருக்கு பதிலாக வேறு இருவர் இந்த படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமலின் நடிப்பில் வெளியான விக்ரம் படம் நானூறு கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் கமலின் நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வெளியானது.

விக்ரமின் கொண்டாட்டம் இன்னும் தீராத நிலையில் தற்போது “இந்தியன் 2” படப்பிடிப்பு துவங்க உள்ளது குறித்து உலகநாயகனின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை உள்ளனர். அதோடு பல ஆண்டு காத்திருப்பில் இருக்கும் “இந்தியன் 2” படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Related posts

Leave a Comment