January 31, 2023
ஆன்மீகம்

வீட்டில் செல்வம் செழித்தோங்க வாஸ்து படி பூஜையறையை இங்கு வைத்து பாருங்க!

இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில் நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் வாஸ்து பற்றி சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன.

வாஸ்து சரியாக அமைந்த வீட்டில் அமைதியும், அன்பும், செல்வமும் பொங்கி வழியும். அப்படி முக்கியமான மூலையாக இருக்கும் ஈசான மூலையில் இருக்கவேண்டிய, இருக்கக்கூடாத பொருட்களைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஈசான மூலை வழியாக சகல நன்மைகளும் வீட்டிற்குள் வருகின்றது. எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும். ஈசான மூலையில் பூஜையறை, படுக்கையறை, வயதுமுதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம்.

மேலும் வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.

ஈசான மூலையை அடைப்பதுபோல் இருக்கும் எந்த பொருள்களையும் வைக்கக்கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு போன்ற தேவையில்லாத எந்த பழைய பொருட்களையும் வைக்க கூடாது. வீட்டின் பிரதான ஈசான மூலையில் கழிப்பறை, குளியலறை, செப்டிக்டேங்க், துணிதுவைக்கும் கல் போன்றவைகள் வைக்கக்கூடாது.

Related posts

Leave a Comment