September 28, 2022
அழகு குறிப்புகள்

பெண்களே உங்கள் முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்…!

நமது முகம் எப்போதும் அழகாக இருக்க வேண்டுமென்று நாம் அனைவருமே விரும்புவோம். அதற்காக சருமத்திற்கு பல பராமரிப்புக்களைக் கொடுப்போம். சருமத்தின் அழகை மெருகேற்ற பல பொருட்கள் இருந்தாலும், அதில் மிகவும் பிரபலமானது கற்றாழை.

கற்றாழை பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது. முக்கியாக இதில் சாலிசிலிக் அமிலம், சாப்போனின்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், நொதிகள் மற்றும் அமினா அமிலங்கள் அதிகளவில் உள்ளன. ஆகவேதான் இது பல சரும பராமரிப்பு பொருட்களில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

உங்களுக்கு கெமிக்கல் கலந்த சரும பராமரிப்பு பொருட்கள் சேராது என்றால், கற்றாழையைக் கொண்டு சருமத்தை பராமரியுங்கள். கற்றாழையை பலவாறு சருமத்திற்கு பயன்படுத்தலாம். குறிப்பாக கற்றாழை ஃபேஸ் பேக் போடுவது மிகவும் நல்ல பலனைத் தரும்.

கற்றாழை மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்:

எலுமிச்சையில் “வைட்டமின் சி” அதிகம் உள்ளது. கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை கலவை சருமத்தில் நல்ல மாற்றத்தைத் தரும். குறிப்பாக இது நேச்சுரல் டேன் ரிமூவராக செயல்படும். அதற்கு இரண்டு டீ ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஐந்து முதல் பத்து நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். உங்கள் முகம் பளிச்சென்று மாறும்.

கற்றாழை, மஞ்சள் மற்றும் தேன் ஃபேஸ் பேக்:

தேன் மிகச்சிறந்த சரும பராமரிப்பு பொருள். இந்த தேனுடன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து முகத்தில் தடவி இருபது நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை மற்றும் தயிர் ஃபேஸ் பேக்:

தயிர் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டது. தயிருடன் கற்றாழை ஜெல் சேர்த்து அற்புதமான ஃபேஸ் பேக் போடலாம். அதற்கு இரண்டு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு டீ ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டீ ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்:

ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி இருபது நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் பேக்:

கற்றாழை ஜெல்லுடன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்த  பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் சருமம் மென்மையாகவும், பொலிவோடும் இருக்கும்.

Related posts

Leave a Comment