August 18, 2022
டெக்னாலஜி

ஒருமுறை சார்ஜ் செய்தால் 510 கி.மீ பயணிக்கும் இ-சைக்கிள் அறிமுகம் – விலை வெறும் பதினைந்து லட்சம் மட்டுமே…!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிக வேகமாக பிரபலமடைந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த சூழ்நிலையில் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் தன் வசம் ஈர்க்கும் வகையில் ஓர் அட்டகாசமான இ-சைக்கிள் அறிமுகமாகிருக்கிறது.

இந்த இ-சைக்கிள் ஒற்றை சார்ஜில் 512 கிமீ ரேஞ்ஜை வழங்குமாம். இந்த சூப்பரான திறன் காரணத்தினாலேயே பலரின் கவனத்தை அந்த இ-சைக்கிள் ஈர்த்துள்ளது.

கொலராடோவைச் சேர்ந்த ஆப்ட்பைக்(OptBike)எனும் நிறுவனமே இந்த அதிக ரேஞ்ஜை வழங்கக் கூடிய இ-சைக்கிளை உருவாக்கியிருக்கும் நிறுவனம் ஆகும்.

R22 எவரெஸ்ட் இ-பைக் அதிகபட்சமாக 58 kmph வேகத்தில் 190 Nm டார்க் திறனை வெளியேற்றக்கூடிய மின் மேட்டாரைக் கொண்டுள்ளது. இந்த சூப்பர் பைக்கின் எடை சுமார் 72 கிலோ உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்த பிறகு, இந்த இ-சைக்கிளில் 24 கிமீ வேகத்தில், 510 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என ஆப்ட்பைக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இது கரடு முரடான மலைப்பாதைகளில் பயணிப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ளதால், கார்பன்-ஃபைபர், பிரேம், ஸ்விங்கார்ம், சஸ்பென்ஷன் செட்-அப், டிஸ்க் பிரேக்குகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

R22 எவரெஸ்டில் எல்சிடி திரை பொருத்தப்பட்டுள்ளது, அதன் மூலமாக பேட்டரி அளவு, வேகம், இரண்டு மீட்டமைக்கக்கூடிய ட்ரிப் ஓடோமீட்டர்கள் மற்றும் வாழ்நாள் ஓடோமீட்டர் போன்ற தகவல்களைக் காணமுடியும்.

தற்போது கொலராடோவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ள இந்த சைக்கிளின் விலை $18,900 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் பதினைந்து லட்சம் ரூபாய் ஆகும்.

மேலும் இந்த இ-பைக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூனிட்களை மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் கரடு முரடான மலைப்பாதைகளில் சவாரி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட R22 எவரெஸ்ட் இ-பைக்கை உலகின் மிகவும் உயரமான பல மலைப்பகுதிகளில் சோதனை செய்துள்ளதாக ஆப்ட்பைக் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாலையே இல்லாத பகுதியிலும் கூட இந்த இ-சைக்கிளைக் கொண்டு பயணிக்க முடியும் என ஆப்ட்பைக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக உலகின் முக்கியமான சிகரங்கள் சிலவற்றில் வைத்து இ-சைக்கிள் சோதனையோட்டம் செய்யப்பட்டிருக்கின்றது.

இத்தகைய சூப்பரான வசதிக் கொண்ட இ-சைக்கிள் மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்க இருப்பது பலரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

Related posts

Leave a Comment