ட்ரெயின்ல நாம ஏறணும்னா அதுக்கு நடைமேடை வேணும்க. இது எல்லாருக்கும் தெரிஞ்சதுன்னு சொல்றீங்களா. இதுவும் பிளாட்பார்ம் சம்பந்தமான ஒரு விஷயம்தான். நாம் ட்ரைனிலே ஏற கூடிய பிளாட்பார்ம பார்த்திருப்பீங்க. அப்டியே கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் நீண்டு இருக்கும். ஏன்னா ட்ரைனிலே இருக்க கூடிய எல்லா பெட்டிகளிலேயும் நாம ஏற இது தேவை. இந்த ரயில்வே ஸ்டேஷனோட பிளாட்பார்ம் நீளம் ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனுக்கும் வித்தியாசப்படும். சில ரயில் நிலையங்களில் நடைமேடை அதிக நீளமா இருக்கும். நம்ம இந்தியாவில் தான் நீளமான பல ரயில் நடைமேடையில் இருக்கு. உலகிலேயே முதலிடத்திலையும் நம்ம இந்திய ரயில் நிலையம்தான் இருக்கு அது எங்க இருக்கு அப்படி நீளமான 15 ரயில்வே பிளாட்பார்ம்கள் எங்கிருக்கு அப்படீங்கிறத பாப்போம்.
1. கோரக்பூர் ரயில்வே ஸ்டேஷன்
முதலாவதா இருப்பது கோரக்பூர் ரயில்வே ஸ்டேஷன் இது உத்திர பிரதேசத்தில் இருக்கு. இந்த ரயில்வே ஸ்டேஷன் பிளாட் பார்ம் நீளம் 1366.33 மீட்டர்கள். 4483 அடி நீளம். இதுதான் இந்தியா மட்டுமல்ல உலகிலேயே மிக நீளமான ரயில் நிலையம்.
2. கொல்லம் ஜங்ஷன்
இரண்டாவது இருப்பது கொல்லம் ஜங்ஷன். இது கேரளா மாநிலத்திலுள்ள கொல்லத்தில் உள்ளது. இந்த பிளாட் பார்ம் நீளம் 1180.5 மீட்டர்கள். 3873 அடிகள்.
3. கரக்பூர்
மூன்றாவதா இருப்பது கரக்பூர் ரயில்வே ஸ்டேஷன். இது மேற்கு வங்காளத்தில் உள்ள கரக்பூரில் இருக்கிறது. இந்த பிளாட் பார்மோட நீளம் 1072.5 மீட்டர்கள். அதாவது 3519 அடி நீளம்.
4. ஸ்டேட் ஸ்ட்ரீட் சப்வே, சிகாகோ
நான்கவதா இருப்பது ஸ்டேட் ஸ்ட்ரீட் சப்வே. இது அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சிகாகோவில் அமைந்துள்ளது. இதன் நடைமேடை நீளம் 1067 மீட்டர்கள் அதாவது 3501 அடிகள். வடக்கு அமெரிக்காவில் உள்ள மிக நீளமான நடைமேடை இது.
5. பிலாஸ்பூர் ரயில் நிலையம்
ஐந்தாவதா இருப்பது பிலாஸ்பூர் ரயில்வே ஸ்டேஷன். இது இந்தியாவின் சட்டிஸ்கரில் அமைந்துள்ளது. இந்த நடைமேடையில் மொத்த நீளம் 802 மீட்டர்கள். அதாவது 2631 அடிகள்.
6. சேரிட்டன் ஷட்டில் டெர்மினல், யுனைடெட் கிங்டம்
ஆறாவதா இருப்பது சேரிட்டன் ஷட்டில் டெர்மினல் இது யுனைடெட் கிங்கிடமில் உள்ள போல்க்ஸ்டோனில் உள்ளது. இந்த நடைமேடையின் நீளம் 791 மீட்டர்கள். அதாவது 2595 அடிகள்.
7. ஜான்சி, உத்திரபிரதேசம்
ஏழாவதாக இருப்பது ஜான்சி ஜங்ஷன். இது உத்திரப்பிரதேசத்திலுள்ள பண்டல்காந்தில் உள்ளது. இந்த நடைமேடையில் மொத்த நீளம் 770 மீட்டர்கள். அதாவது 2526 அடிகள்.
8. ஈஸ்ட் பெர்த் ரயில்வே ஸ்டேஷன், பெர்த்
எட்டாவதாக இருப்பது ஈஸ்ட் பெர்த் ரயில்வே ஸ்டேஷன். இது மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்தில் அமைந்துள்ளது. இந்த நடைமேடையின் மொத்த நீளம் 770 மீட்டர்கள். அதாவது 2526 அடிகள்.
9. கால்கோரிலி ரயில் நிலையம், ஆஸ்திரேலியா
ஒன்பதாவது இடத்திலிருப்பது கால்கோரிலி ரயில் நிலையம். இது ஆஸ்திரேலியாவின் கால்கோரிலியில் அமைந்துள்ளது. இந்த நடைமேடையில் மொத்த நீளம் 760 மீட்டர்கள்.அதாவது 2493 அடி நீளம் கொண்டது
10 சோன்பூர் ஜங்ஷன் ரயில் நிலையம், பீகார்
பத்தாவது இடத்திலிருப்பது சோன்பூர் ஜங்ஷன் ரயில் நிலையம். இது பிஹாரில் உள்ள சோன்பூரில் உள்ளது. இந்த நடைமேடையின் மொத்த நீளம் 738 மீட்டர்கள்.அதாவது 2421 அடி நீளம் கொண்டது
11.நபாத்விப் தாம் ரயில் நிலையம், நாடியா
பதினோராவது இடத்திலிருப்பது நபாத்விப் தாம் ரயில் நிலையம். இது மேற்கு வங்கத்தில் உள்ள நடியாவில் உள்ளது. இந்த நடைமேடையின் மொத்த நீளம் 720 மீட்டர்கள்.அதாவது 2362 அடி நீளம் கொண்டது
12. பிலிண்டர்ஸ் ஸ்ட்ரீட் ரயில்வே ஸ்டேஷன்,மெல்போர்ன்
பனிரெண்டாம் இடத்திலிருப்பது பிலிண்டர்ஸ் ஸ்ட்ரீட் ரயில்வே ஸ்டேஷன். இது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போனில் உள்ளது. இந்த நடைமேடையின் மொத்த நீளம் 708 மீட்டர்கள்.அதாவது 2323 அடி நீளம் கொண்டது
13. போர்ட் பைரி ரயில்வே ஸ்டேஷன், சவுத் ஆஸ்திரேலியா
பதிமூன்றாம் இடத்திலிருப்பது போர்ட் பைரி ரயில்வே ஸ்டேஷன். இது தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள போர்ட் பைரியில் அமைந்துள்ளது . இந்த நடைமேடையின் மொத்த நீளம் 701 மீட்டர்கள்.அதாவது 2300 அடி நீளம் கொண்டது
14. சிட்டர்ட் ரயில்வே ஸ்டேஷன், நெதர்லாந்து
பதினான்காம் இடத்திலிருப்பது சிட்டர்ட் ரயில்வே ஸ்டேஷன். இது நெதர்லாந்தில் உள்ள சிட்டர்ட் இல் அமைந்துள்ளது . இந்த நடைமேடையின் மொத்த நீளம் 700 மீட்டர்கள்.
15. ஆம்ஸ்டெர்டாம் ரயில்வே ஸ்டேஷன், நெதர்லாந்து
பதினைந்தாம் இடத்திலிருப்பது ஆம்ஸ்டெர்டாம் ரயில்வே ஸ்டேஷன். இது நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டெர்டாம் இல் அமைந்துள்ளது . இந்த நடைமேடையின் மொத்த நீளம் 695 மீட்டர்கள்.