பலருடைய வீடுகளிலும் கடன் தொல்லை அதிகமாக இருக்கும். இதற்கு
என்ன செய்யலாம் என பலரும் யோசித்து கொண்டிருப்பார்கள். சிலர் அதிக
பொருள்செலவு செய்து பல பரிகாரங்களை செய்வார்கள். ஆனால்
பணமில்லாதவர்களுக்கு இது செய்ய இயலாது. இதற்கு பதிலாக
நீங்கள் எந்தவித செலவும் இல்லாமல் ஒரு சில பூஜைகள் மற்றும்
பரிகாரங்களை செய்துவந்தாலே நீங்கள் உங்கள் கடன் தொல்லையிலிருந்து
விடுபட்டு உங்களுடைய வீட்டில் செல்வம் கொழிக்கும். இந்த செயல்களை
நீங்கள் முழு நம்பிக்கையோடு மனதில் இறைவனை நினைத்து செய்தாலே
போதும். உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். அப்படி நீங்கள் என்னென்ன
செய்யவேண்டுமென நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியை தொடர்ந்து 24 வெள்ளி கிழமைகள் வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் அரச மரத்தடி விநாயகருக்கு 11 தீபம் ஏற்றி 11 முறை வலம் வந்து வழிபட்டால் உங்கள் பணவரவு நிரந்தரமாகும்.
தினம் தோறும் உங்கள் குல தெய்வத்தை காலையில் பிரார்த்தனை செய்து வர வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று சத்திய நாராயண பூஜையை செய்து வந்தால் செல்வங்கள் பெருகும்.
வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்கு தேவையான பசும்பாலை வழங்கினால்
பண வரவு உண்டாகும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவிக்க செல்வம் பெருகும்.
மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளித்திட வீட்டில் செல்வம் வந்து சேரும்.
ஆந்தையை வழிபட்டால் பண வரவு உண்டாகும். மட்டுமல்லாது ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வந்தால் செல்வ வளம் பெருகும்.
வீட்டில் வெள்ளை புறாக்கள் வளர்த்து வந்தால் பணத்தட்டுப்பாடு நீங்கும்.
வியாழக்கிழமை 4 மணி முதல் 5 மணி வரை உள்ள நேரம் குபேர காலமாகும். இநேரத்தில் இல்லத்தில் குபேரனை வழிபட்டு வர பண வரவு அதிகரிக்கும்.
சுத்தமான தண்ணீரில் வாசனை திரவியம் கலந்து இரண்டு வேளைகளிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி வீடு முழுவதும் தெளித்திட செல்வம் வந்து சேரும்.
அமாவாசையில் நம் முன்னோர்கள் இறந்த திதியில் தானம் செய்திட தனலாபம் உண்டாகும்.
இவற்றை தொடர்ந்து இடை விடாது செய்து வந்தால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக மாறும்.