November 27, 2022
கனவுகள்

காதல் கனவு பலன்கள்

காதல் கனவு பலன்கள் பற்றி சாஸ்திரங்கள் அல்லது பெரியோர்கள் என்ன கூறியிருக்கி றார்கள் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

உங்கள் உள்ளத்தில் காதல் தோன்றுவது போல் கனவு கண்டால் சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும், அதே நேரம் எதிரிகளும் ஏற்படுவார்கள். வீண் பழி உண்டாகி மறைந்து விடும்.

உங்கள் காதலனிடமோ அல்லது காதலியிடமோ காதலை சொல்வது போல கனவு வந்தால் உங்களின் வேலைகள் வெற்றிகரமாக முடிய போகிறது என்று அர்த்தம்.

உங்கள் காதனோடு நீங்கள் உல்லாசமாக பொழுது போக்குவதுபோல் கனவு கண்டால் ஆசைகள் நிறைவேறும், திருமணச் செய்திகள் வரும். சில தடங்கல்கள் ஏற்பட்டு திருமணம் நடைபெறும்.

உங்கள் காதலியோடு நீங்கள் உல்லாசமாக பொழுது போக்குவது போல் கனவு கண்டால் உங்கள் திருமணத்திற்குச் சில தடங்கல்கள் ஏற்பட்டு பின்பு அவை நீங்கிவிடும். அல்லது ஒரு முக்கியமான காரியத்தில் நீங்கள் சிறிது ஏமாற்றத்துக்கு ஆளாக நேரலாம். என்றாலும் முடிவில் நீங்கள் எண்ணியபடியே அது நடைபெற்று விடும்.

உங்கள் காதனோடு நீங்கள் உல்லாசமாக பொழுது போக்குவதுபோல் கனவு கண்டால் உங்கள் மனதிற்குள் நீங்கள் வளர்த்து வைத்துக் கொண்டிருக்கிற ஒரு முக்கியமான ஆசை நிறைவேறப் போகிறது. நீங்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய ஒரு திருமணச் செய்தி உங்களுக்குக் கிடைக்கப்போகிறது.

உங்கள் உள்ளத்தில் காதல் வேட்கை எழுவது போல் கனவு கண்டால் சமூகத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரும். அதே சமயத்தில் உங்களுக்கு சில எதிரிகளும் ஏற்படுவார்கள். பொறாமை காரணமாக, உங்கள் மீது பழியான வதந்திகளையும் அவர்கள் கிளப்பி விடுவார்கள். அது பற்றி நீங்கள் ஆத்திரம் அடையக் கூடாது. பொறுமையாக இருந்தால், அந்தப் பழிச் சொற்கள் தாமாகவே மறைந்துவிடும்.

நீங்கள் காதலில் தோல்வியுற்றது போல் கனவு கண்டால் சில மறைமுகமான எதிரிகள் உங்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். அவர்கள் யார் என்பது விரைவில் உங்களுக்கு விளங்கிவிடப் போகிறது. அத்துடன் உங்கள் தொல்லைகளும் தீர்த்துவிடப் போகின்றன.

உங்கள் காதலி அல்லாத வேறு இளம் பெண்களுடன் நீங்கள் காதல் பேச்சுகளைப் பேசுவது போல் கனவு கண்டால் நீங்கள் பயன் உள்ள காரியங்களைக் கவனிக்காமல், பயன் அற்ற காரியங்களிலேயே ஆர்வம் காட்டி வருகிறீர்கள். இதனால் நீங்கள் பிறகு பல இழப்புகளுக்கு ஆளாக நேரிடலாம். ஆகையால், இப்போதே உடனடியாக உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள்.

Related posts

Leave a Comment