கனவுகள்

காதலர்கள் உங்கள் கனவில் புறாவைக் கண்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

காதலர்கள் பொதுவாக புறாவை கனவில் காண்பது உங்களுடைய காதல் நீங்கள் காதலிப்பவரை பற்றிய தகவல்களை சொல்வதாக அமைகிறது. புறாவை பற்றி நீங்கள் பொதுவாக காணக்கூடிய கனவு உங்களுடைய அன்பை பற்றி சொல்கிறது. கனவில் நீங்கள் பார்க்கக்கூடிய புறா நேர்மறை ஆற்றலையும், அன்பு, அமைதி, செழிப்பு இவைகளையும் குறிக்கிறது.

நீங்கள் ஒரு புறாவை பிடிக்க முயற்சிப்பது போல கனவு கண்டால் விரைவில் உங்களுக்கு காதல் கைகூடும் என அர்த்தம். அந்தப் புறாவை நீங்கள் கடைசியாக பிடிப்பது போல கனவு கண்டால் நீங்கள் விரும்பும் நபருடன் உங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என அர்த்தம்.

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு புறாவை பிடிக்க தவறுவது போல கனவு கண்டால் அது உங்கள் காதலில் தோல்வி ஏற்படும் என்பதை குறிக்கிறது.

உங்களுடைய கனவில் ஒரு புறா வானத்தில் பறப்பதைப் போல நீங்கள் கண்டால் நீங்கள் அதிகம் விரும்பும் ஒருவரிடம் உங்களுடைய காதலை சொல்லக்கூடிய நேரம் வந்துவிட்டது என்பதை குறிக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் உங்களுடைய காதலை சொன்னால் உங்களுடைய காதல் ஏற்கப்படுமாம்.

நீங்கள் உங்களுடைய கனவில் வெள்ளை புறாக்களை கண்டால் அது ஒரு நல்ல அறிகுறி. நீங்கள் விரும்புபவருடன் திருமணம் நடந்து மகிழ்ச்சியாக கடைசி வரை சேர்ந்து வாழ்வீர்கள்.

நீலம் மற்றும் கருப்பு கலரில் புறாவை நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் நீங்கள் நேசித்து கொண்டிருப்பவரிடம் உங்களுக்கு தவறான புரிதல் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் ஒருவருக்கு ஒருவர் அடிக்கடி பிரச்சனைகள் செய்து மன அழுத்தத்தை உண்டாக்கி கொள்வீர்கள்.

புறா சத்தமிடுவது போலவும் நீங்கள் அந்த புறாவிடம் பேசுவது போலவும் கனவு கண்டால் நீங்கள் காதலிப்பவருடன் மிகவும் அன்பாகவும், புரிதலோடும், பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து மரியாதையாக இருப்பீர்கள் என்பதை குறிக்கிறது. உங்களுக்கு திருமணம் ஆனபிறகும் கடைசி வரைக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வீர்கள் என்பதை குறிக்கிறது.

புறா ஒன்று காலில் கட்டப்பட்ட செய்தியுடன் உங்களை நோக்கி வருவது போல நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு பிடித்தமானவரிடமிருந்து விரைவில் நல்ல செய்தி வந்து சேரும் என்பதை குறிக்கிறது.

உங்கள் கனவில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென புறா பறந்து செல்வது போல கண்டால் நீங்கள் காதலிப்பவருடனான உறவு நீண்ட காலம் நீடிக்காது என்பதை குறிக்கிறது. ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டு விரைவில் பிரிவு ஏற்படும் என்பதையும் இது குறிக்கிறதாம்.

உங்களுடைய கனவில் நீங்கள் புறா மாடத்தில் இருப்பது போல கண்டால் உங்களை காதலிப்பவர்கள் ஏராளமான பேர் இருப்பார்கள். அவர்களிடமிருந்து யாரை தேர்வு செய்வது என நீங்கள் குழப்பம் அடைவீர்கள் என்பதை குறிக்கிறது.

ஒரு பெரிய புறாவை நீங்கள் உங்களுடைய கனவில் காண்பது விரைவில் நீங்கள் சந்திக்கப்போகும் ஒருவரை குறிக்கிறது. மிக முக்கியமாக அது உங்களுக்கு மிகவும் பிடித்தமானவராக இருக்கலாம்.

உங்கள் கனவில் ஒரு புறா உங்களுடைய கையில் அமர்ந்திருப்பதைப் போல கண்டால் அது நீங்கள் காதலிப்பவருடைய நம்பிக்கையை பற்றி சொல்கிறது. அவரும் உங்களிடம் அதிக நம்பிக்கையை எதிர்பார்க்கிறார் என அர்த்தம்.

கனவில் நீங்கள் புறாக்களை பார்ப்பது அன்பு மற்றும் காதலை சொல்கிறது. ஆனால் இந்த கனவு முழுமையாக என்ன சொல்ல வருகிறது என்பதையும் பார்க்க வேண்டும். சில கனவுகள் நீண்ட பெரும் கனவுகளாக இருக்கும் அது வேறு பல அர்த்தங்களையும் கொண்டதாக இருக்கும்.

Related posts

Leave a Comment