November 27, 2022
அழகு குறிப்புகள்

கோடையில் உங்கள் கூந்தலை இப்படி பராமரித்தாலே முடிஉதிர்வை தடுக்கலாம்!

கோடைகாலத்தில் சிலர் கூந்தலில் பலவிதமான பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. ஆனால் நீங்கள் உங்கள் முடியை சரியாக பராமரித்தாலே எந்த விதமான பிரச்சனைகளும் ஏற்படாமல் பாதுகாக்கலாம். அப்படி நம் முடியை பராமரிக்க நாம் செய்ய வேண்டிய சில குறிப்புகளை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கோடைக்காலங்களில் வாரத்திற்கு இரண்டு நாள் அல்லது மூன்று நாள் தலைக்கு குளியுங்கள்.

தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கும் போது ஸ்கால்ப்பில் இருக்கும் அழுக்குக்கள் நன்கு நீங்கும் படி சரியாக மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்யும் போது நகங்கள் படாதவாறு கவனமாக செய்ய வேண்டும்.

மேலும் மசாஜ் செய்யும் போது மெதுவாக மட்டுமே மசாஜ் செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் வேகமாக தேய்த்தால், முடி வலுவிழந்து போக அதிக வாய்ப்புகள் உண்டு.

அதிக கெமிக்கல் உள்ள ஷாம்புக்களை கூந்தலுக்கு பயன்படுத்தாதீர்கள். அவை கூந்தலை வறட்சி அடையாமலும், துளைகளை அடைக்காமலும் பார்த்துக் கொள்ளும். கெமிக்கல் அதிகம் நிறைந்த ஷாம்பு கூந்தலை சேதப்படுத்திவிடும்.

மிருதுவான கூந்தல் மற்றும் சிக்குகள் இல்லாத கூந்தலை பெறவும், கூந்தல் உடைவதை தவிர்க்கவும் கண்டிஷனர் போட்டு குளியுங்கள்.

குளித்த பின்னர் கூந்தலை இயற்க்கையாக காய வையுங்கள். அப்படி செய்து வந்தால் மட்டுமே கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது கூந்தலுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.

அடிக்கடி உங்கள் கையை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் அடிக்கடி உங்கள் கையானது முடி பகுதிக்கு செல்லும். அப்படி செல்லும் போது அசுத்தமான ஏதாவதை நீங்கள் தொட்டிருந்தால் அந்த அசுத்தங்கள் உங்கள் கூந்தலை அண்டாமல் இருக்க அடிக்கடி கைகளை கழுவுங்கள்.

வெயிலில் செல்வதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். ஏனென்றால், நேரடி சூரிய ஒளி மற்றும் காற்று தூசு போன்றவை தலை முடிகளின் மீது படும் போது கூந்தலுக்கு தீங்கை ஏற்படுத்தும். ஆகவே கண்டிப்பாக வெளியே செல்ல வேண்டி இருந்தால் துணி கொண்டு முடியை மறைத்து கட்டிக் கொள்வது நல்லது.

Related posts

Leave a Comment