அடுத்த மாதம் வெளியாகி பட்டைய கிளப்ப இருக்கும் மாஸ்டர் படத்தின் “அவன் கண்ணப் பார்த்தாக்கா” பாடலின் லிரிக்ஸ் வெளியீடு….

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று வெளியான அவன் கண்ணப் பார்த்தாக்கா என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாக உள்ளதை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அதன்படி இந்த படத்தின் DI பணிகள் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனின் மேற்பார்வையிலும் இறுதிக்கட்ட ஒலிப்பதிவு பணிகளும் நடைபெற்று வருகிறதாம்.

இறுதிகட்டப் பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவுபெறவிருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் பிரபலங்கள் படம் குறித்து பேசியது படத்தின் மீதான எதிர்பார்ப்பை தீவிரப்படுத்தியுள்ளது. அனிருத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *