September 28, 2022
செல்வம்

அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும் ஃபெங் சுய் சிரிக்கும் புத்தர் சிலை பணம் ஈர்க்கும் வகைகள்

ஒவ்வொரு கணமும் உறவுகளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், தொழில் மற்றும் வேலைகளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள். பலவகையான சிக்கல்கள், மன அழுத்தத்துடன் போராடிக் கொண்டிருக்க கூடிய ஒரு வாழ்க்கையை நாம் வாழ்ந்து வருகிறோம். பலவித கஷ்டங்களோடு வெளியிலிருந்து வீட்டிற்கு சோர்வாக வருகிற நம்மை சிரித்த முகத்தோடு சந்தோஷமாக வீட்டிலிருந்து யாராவது வரவேற்றால் நன்றாக இருக்கும் என நினைப்போம்.

ஆனால் நாம் நினைப்பது போல் நடப்பதில்லை. அப்படி நம்முடைய வீட்டில் இருந்து யாரும் சந்தோஷமாக நம்மை வரவேற்பதில்லை. காரணம் அவர்களும் இப்படிப்பட்ட பல பிரச்சனைகளோடு இருப்பார்கள். அப்படி அவர்கள் உங்களை சிரித்துக்கொண்டு வரவேற்பதாக இருந்தாலும் கண்டிப்பாக உங்களிடம் ஏதாவது எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருக்கும். பணமாகவோ பொருளாகவோ ஏதாவது நீங்கள் கொண்டு செல்லும் பொழுது மட்டுமே பலரும் இப்படிப்பட்ட சந்தோஷமான சிரித்த முகத்தோடு உங்களை வரவேற்பார்கள்.

ஆனால் இப்படி எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிரித்த முகத்துடனே உங்களை வரவேற்கக் கூடியது சிரிக்கும் புத்தர் எனப்படும் ஃபெங் சுய். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படி எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருக்க கூடிய இந்த சிரிக்கும் புத்தர் சிரிப்பதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கு பல அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆற்றலையும் அதிகம் அள்ளிக் கொடுக்கக்கூடியவர்.

இந்த சிரிக்கும் புத்தர் உங்களுடைய வீட்டில் இருந்தால் சந்தோஷமான மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ தொடங்கலாம். பலரும் இப்படி சிரிக்கும் புத்தரை தங்களுடைய வீடுகளில் வைத்து அதிர்ஷ்டத்தையும், சந்தோஷத்தையும் அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள். சிரிக்கும் புத்தர் உங்களுடைய வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும், மகிழ்ச்சியையும் அதிகம் கொண்டு வருவார்.

மேலும் உங்களுடைய மன அழுத்தத்தையும், நிதி பிரச்சனைகளையும் மாற்றுவார். சிரிக்கும் புத்தர் உங்களுடைய துவண்டு போய் இருக்கக்கூடிய மனநிலையை உடனடியாக மாற்றக்கூடிய சக்தி கொண்டவர். சிரிக்கும் புத்தருடைய வயிற்றை நீங்கள் தடவிக் கொடுத்தால் உங்களுடைய துரதிஷ்டம் அனைத்தும் வெளியேறும். ஒவ்வொரு நாளும் அவருடைய வயிற்றில் நீங்கள் தடவிக் கொடுக்கும் பொழுது உங்களுடைய துரதிஷ்டம் அனைத்தும் நீங்கி நேர்மறை எண்ணங்களும், அதிர்ஷ்டங்களும் உங்களை வந்து சேரும்.

கடைகளில் நீங்கள் சிரிக்கும் புத்தரை வாங்க செல்லும் பொழுது அங்கு பல்வேறு தோரணையில் சிரிக்கும் புத்தர் இருப்பதை பார்க்கலாம். இதனால் எதை வாங்குவது என பலவித குழப்பங்கள் வரும். சிரிக்கும் புத்தரின் தோரணைக்கேற்ப பலவித பலன்களும் உள்ளது.

வோ லூ

இந்த வோ லூ அனைத்து விதமான மோசமான ஆற்றல்களையும் உறிஞ்சுவதாக நம்பப்படுகிறது. வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை எல்லாம் தன்னகத்தே உறிஞ்சி கொளவதாக நம்பப்படுகிறது. வோ லூவை வைத்திருக்கும் சிரிக்கும் புத்தர் உங்கள் வீட்டில் செழிப்பையும் நீண்ட ஆயுளையும் தருகிறார்.

நாணயத்தை வைத்திருக்கும் சிரிக்கும் புத்தர்

தங்க நாணயங்களை கையில் வைத்திருக்கும் சிரிக்கும் புத்தர் செல்வத்தை அதிகம் கொடுப்பவர். அவர் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் மட்டுமே கொடுப்பவர்.

ஒரு டிராகன் ஆமை மீது உட்கார்ந்து இருப்பது

உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் தொடர்ந்து சிக்கல்களை எதிர் கொண்டு வந்தால் நீங்கள் ஒரு ட்ராகன் ஆமை மீது அமர்ந்திருக்கும் சிரிக்கும் புத்தரை வாங்கி உங்களுடைய வீட்டில் வைக்க வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் வடக்கு நோக்கி அவரை வைத்து வைக்கும்பொழுது உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அதிசயங்கள் நடக்கும். உங்களுடைய சிக்கல்கள் எல்லாம் குறைந்து நீங்கள் சந்தோஷமாக வாழ தொடங்குவீர்கள்.

கிறிஸ்டல் சிரிக்கும் புத்தர்

கிறிஸ்டல் கொண்டு செய்யப்பட்ட ஒரு புத்தரை நீங்கள் வாங்கினால் அவர் உங்களுக்கு அதிக ஞானம் பெற உதவி செய்வார். நீங்கள் உங்களுடைய வீட்டின் மையத்திலோ அல்லது படிக்கும் அறையிலோ வைக்க வேண்டும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இந்த புத்தரை வாங்கி நீங்கள் உங்களுடைய வீடுகளில் வைக்கலாம். இதனால் மாணவர்களுக்கு படிப்பதற்கு நல்ல ஆர்வம் ஏற்படும்.

குழந்தைகள் சுற்றி காணப்படும் சிரிக்கும் புத்தர்

நீங்கள் ஒரு குடும்பத்தை கட்டமைப்பதற்கு கவனம் செலுத்துவீர்கள் என்றால் உங்களுக்கு இந்த புத்தர் சிலை அதிர்ஷ்டத்தையும், நல்ல வாழ்க்கையையும் கொடுக்கக்கூடியது. இதை நீங்கள் உங்களுடைய படுக்கையறையின் மேற்கில் வைக்க வேண்டும்.

Related posts

Leave a Comment