November 27, 2022
உடல்நலம்

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் புண்களை வேகமாக குணமாக்கும் ஓர் அற்புத மருந்து..

சர்க்கரை நோய் இன்றைய காலகட்டத்தில் அனைவரையுமே வாட்டி வதைக்கிற நோயாக மாறிவிட்டது. இதிலும் சர்க்கரை நோய் உடையவர்கள் புண்கள் வருவதை பார்த்து மிகவும் அச்சப்படுவார்கள்.

குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் புண்ணானது காலில் தான் அதிகமாக வரக்கூடும். முதலில் ஒரு சிறு கொப்புளம் தோன்றும். அப்படியே அந்த புண் உடைந்து சிறு குழி போன்ற புண் ஏற்படும்.

இந்த புண் பிறகு பெரிதாகி எந்த ஆங்கில மருந்துகள் கொடுத்தாலும் பலனளிப்பதில்லை. ஆங்கில மருந்துகள் சாப்பிட்டாலும் சில நாட்களில் விரலை எடுக்க கூடிய நிலை ஏற்படும்.

அதன் பிறகு கையை எடுக்க வேண்டும், சிலருக்கு காலை வெட்டி எடுக்க வேண்டும். இப்படி இறுதியில் சிறு சிறு பகுதிகளாக வெட்டி எடுக்கப்படும் நிலை உண்டாகும். இதற்கு தீர்வு இதோ!!

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இலகுவில் மாறாத புண்களை வேகமாக குணமாக்க ஓர் அற்புத மருத்துவம் ஆவாரம் பூ சிகிச்சை. இது சர்க்கரை நோயால் வரும் புண்களை எளிதில் குணமாக்கும்.

செயற்கை மருத்துவங்களை விட இயற்கை மருத்துவங்கள் தான் மிகவும் சிறந்தது. அதனால் இயற்கையாக புண் மாறி பழைய நிலைக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஆவாரம்பூ இலை

சர்க்கரை நோயால் வரும் புண்களுக்கு மருந்து எளிதில் கிடைக்க கூடிய இந்த ஆவாரம் பூ மற்றும் இலை தான். இந்த இலை பெரும்பாலும் கிராமத்தில் எளிதாக கிடைக்கும்.

நகரங்களில் இருப்பவர்கள் நாட்டு மருந்து கடைகளில் சென்று ஆவாரம் பூ இலை பொடி என கேட்டால் கிடைக்கும். இனி இதை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.

பயன்படுத்தும் முறை

ஒரு கரண்டி நல்லெண்ணெய் எடுத்து கொள்ளுங்கள். முதலில் ஏதேனும் ஒரு சிறிய பாத்திரத்தில் அந்த நல்லெண்ணெயை ஊற்றி லேசாக சூடாக்குங்கள்.

சூடானவுடன் ஆவாரம்பூ இலை பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து எண்ணெயுடன் போட்டு நன்றாக சூடாகும் வரை வையுங்கள். இவ்வேளையில் நன்றாக கிளறி விடுங்கள்.

இப்போது நல்லெண்ணெய் மற்றும் ஆவாரம்பூ இலை பொடி இரண்டும் மிக்ஸ் ஆகி எண்ணெய் கருப்பு நிறத்தில் மாறும். அதன் பின் அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும்.

இந்த மருந்தை ஒரு காட்டன் துணி ஒன்றில் வைத்து உங்கள் புண்ணில் கட்டி விடுங்கள். இதனை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் சர்க்கரை நோயால் வரும் புண் எளிதில் குணமாகும்.

சர்க்கரை நோய் உடையவர்களுக்கு இந்த இயற்கை மருத்துவம் நல்ல பலனை அளிக்கும். இலகுவில் மாறாத புண்களை வேகமாக குணமாக்கும். விரல்கள், கால் போன்றவற்றை வெட்டி நீக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது. இது ஓர் இயற்கையான அற்புத மருத்துவம்.

Related posts

Leave a Comment