யாரும் செல்ல முடியாத மர்மம் நிறைந்த மெட்ரோ 2

மெட்ரோ 2, ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் பரபரப்பான நகர வீதிகளின் அடியில் செல்லக்கூடிய ஒரு ரகசிய நிலத்தடி போக்குவரத்து. டி 6 என்ற ரகசிய பெயரில் இந்த ரகசிய போக்குவரத்து அமைப்பு காணப்படுகிறது.

இந்த ரகசிய பாதை ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது எந்த அளவு ஆழத்தில் செல்கிறது என்று பார்த்தால் நீங்கள் திகைத்து விடுவீர்கள். சுமார் 210 மீட்டர் அதாவது 288 அடி ஆழத்தில் இந்த அண்டர்கிரவுண்ட் பாதை போகிறது.

இந்த மெட்ரோ இரண்டைப் பற்றி ஏராளமான மர்மங்கள் போன்ற கதைகள் வலம் வருகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் இந்த சுரங்கப் பாதையை மக்கள் யாரும் பார்க்க முடியாத அளவில் தடை பண்ணி வைத்திருக்கிறார்கள்.

அதனால் இதைப்பற்றிய மர்மக் கதைகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. இந்த ரகசிய பாதை கிரெம்ளின், ஜெனரல் ஸ்டாஃப் அகாடமி, ஷெல்டோவ்ஸ்கி ஹவுஸ், வுனுகோவோ -2 விமான நிலையம் உள்ளிட்ட பல முக்கியமான அரசு மற்றும் நிர்வாக நிறுவனங்களை இந்த ரகசிய மெட்ரோ இணைகிறதாக சொல்லப்படுகிறது.

இந்த மெட்ரோ 2 ன் நீளம் பப்ளிக் மெட்ரோவை விட அதிகமாக இருப்பதாகவும். நான்கு லைன்கள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இங்கு ஏராளமான ரகசிய பதுங்குகுழிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த ரகசிய பதுங்குகுழிகள் போக்குவரத்து சம்பந்தப்பட்டு மட்டும் கட்டப்படவில்லையாம். போர் சூழல் வந்தால் அரசாங்க அதிகாரிகள் தங்குவதற்கு ஏற்ற வகையில் பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலத்தடி சுரங்கத்தில் எல்லா வசதிகளும் உள்ள குடியிருப்புகள் கூடவே பல டெக்கினிக்கல் அறைகளும் இருக்கிறதாம். இங்கு 15 ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் தங்க முடியுமாம். மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால் இங்கு தண்டவாளங்கள் கான்கிரீட் கொண்டு வடிவமைத்திருக்கிறார்கள்.

இதனால் சுரங்கத்தில் ரயில் மட்டுமல்ல கார்களும் ஓடுமாம். பல வருடங்களுக்கு முன்னால் சுரங்கப்பாதையின் எல்லைக்கு செல்ல சிறப்பு பாஸ் இருந்தால் மட்டும் தான் போக முடியுமாம். இப்போது யாருக்கும் அனுமதி இல்லை என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லை இந்த இந்த மெட்ரோவில் மிகப்பெரிய ராட்சத எலிகளை பலரும் பார்த்திருக்கிறார்களாம். மன்னன் நெப்போலியனின் போர் வீரர்கள் இங்கு பேய்களாவும் சுற்றி வருகிறார்களாம்.

500 வருடங்களாக ஒரு சூனியக்காரியும் வசித்து கொண்டு வருகிறாளாம். இங்கிருந்து டார்பாலின் பூட்ஸ் சத்தமும் அடிக்கடி கேட்குமாம். இப்படி பல கதைகள் உலா வருகிறது. இதை பலரும் கட்டுக்கதை என்றும் சொல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *