15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து மிக கடுமையான ஊரடங்கு உத்தரவை அறிவித்த மோடி!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. பேரிடரில் இருந்து இந்தியா எப்படி காத்து கொள்கிறது என்று காட்ட வேண்டிய முக்கியமான தருணம் இது.

அடுத்த 21 நாட்கள் நமக்கு மிக சவாலான தருணம். அரசின் ஆலோசனைகளை மட்டும் பின்பற்ற வேண்டும். மக்கள் ஊரடங்கை காட்டிலும் இது கடுமையான ஊரடங்கு.

சுகாதார பணிக்கு முக்கியத்துவம் அளிக்க அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொள்கிறேன். அரசுக்கு மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100% கட்டுப்படுத்துவது சாத்தியம் என்று அவர் உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *