சராசரியாக ஒரு நபர் இரவில் நான்கிலிருந்து ஆறு கனவுகள் வரை காண்பார். இப்படி நாம் காணக்கூடிய ஒவ்வொரு கனவையும் தெளிவாக விவரமாக நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. இப்படி இரவில் நமக்கு கனவுகள் ஏன் வருகிறது என்பதை பற்றி அறிவியல் இன்னும் முழுமையாக விளக்கவில்லை.
இப்படி நம் காணக்கூடிய கனவுகளில் அடிக்கடி வரக்கூடிய கனவுகளில் ஒன்று பணத்தை கனவில் காண்பது. பணம் இயல்பாகவே உங்களுடைய வாழ்க்கையில் ஒன்றி போவதால் அடிக்கடி இந்த கனவு உங்களுக்கு வருகிறது. பணம் எப்பொழுதுமே உங்களுடைய செல்வாக்கை அதிகரிக்கும் விதமாகவே இருக்கிறது.
இதனால் நீங்கள் உங்களுடைய கனவில் பணத்தை இழப்பது போல கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் ஏதோ சிக்கல்கள் ஏற்படப் போகிறது என்பது இது குறிக்கிறது. யாரோ ஒருவர் உங்களுக்கு பணம் கொடுப்பது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் விரைவில் ஒருவர் உங்களுக்கு வரும் சிக்கல்களில் மிகவும் ஆதரவாக இருப்பார் என்பதை குறிக்கிறது.
நீங்கள் நினைத்துப் பார்க்காத நேரத்தில் மிக முக்கியமான நல்ல செய்திகள் வந்து சேரும் என்பதை குறிக்கிறது. நீங்கள் உங்களுடைய கனவில் பணத்தை வெல்வதைப்போல கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி வெற்றி பாதையை நோக்கி செல்கிறீர்கள் என்பதை குறிக்கிறது.
நீங்கள் உங்களுடைய கனவில் பணத்தை கண்டுபிடிப்பது போல கண்டால் விரைவில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்பதை குறிக்கிறது. உங்களுடைய குடும்ப வாழ்க்கையில், வேலைகளில் பல நல்ல விஷயங்கள் நடைபெறும் என்பதை குறிக்கிறது.
நீங்கள் தொடர்ந்து பணம் சம்பாதிப்பதை பற்றி நினைத்துக் கொண்டிருந்தாலும் இப்படிப்பட்ட கனவுகள் உங்களுக்கு தொடர்ந்து வரும். இதனால் உங்களுடைய தூக்கத்தில் பாதிப்புகள் ஏற்படும்.