செல்வம்

தீபாவளிக்கு பணம் கொட்டும் முகூர்த்த டிரேடிங்…! ஒரு மணி நேரம் மட்டும்தான்…!

லட்சுமி தேவியை வழிபடும் தீபாவளி திருநாளில் பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்வது மங்களகரமானதாக கருதப்படுவதால் பல முதலீட்டாளர்களுக்கு முகூர்த்த டிரேடிங் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்திய பங்குச் சந்தைகளான மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) மற்றும் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) தீபாவளி, லக்ஷ்மி பூஜையை முன்னிட்டு வருகிற திங்கள்கிழமை அதாவது அக்டோபர் இருபத்தி நான்கு விடுமுறை ஆகும். இருப்பினும், முகூர்த்த வர்த்தகத்திற்காக இரண்டு பரிமாற்றங்களும் அன்று ஒரு மணி நேரம் திறந்திருக்கும். அப்போது, ஒரு மணி நேரம் பங்குச் சந்தை வர்த்தகம் நடைபெறும்.

இது ஐம்பது ஆண்டுகால பாரம்பரியம், இது வர்த்தக சமூகத்தால் இன்று வரை தக்கவைக் கப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி தீபாவளி புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. ஆகையால், இந்த நாளில் நடைபெறும் முகூர்த்த வர்த்தகம் ஆண்டு முழுவதும் செல்வத்தையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.

அதன்படி, ஈக்விட்டி மற்றும் டெரிவேடிவ்ஸ் பிரிவில் வர்த்தகம் மாலை 6:15 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இரவு 7:15 மணிக்கு நிறைவடையும்.

ப்ரீ-ஓபன் அமர்வு மாலை 6:00 மணிக்கு தொடங்கி மாலை 6:08 மணிக்கு நிறைவடையும். அதேபோல், மூலதனச் சந்தைப் பிரிவிற்கு, பிளாக் டீல் அமர்வு நேரங்கள் மாலை 5:45 முதல் மாலை 6:00 மணி வரை.

ப்ரீ-ஓபன் அமர்வு மாலை ஆறு மணிக்குத் தொடங்கி மாலை 6:08 மணி வரையிலும் சந்தை திறந்திருக்கும். எனவே, தீபாவளி திருநாளில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தத் தேதியை மறந்துவிடாதீர்கள்.

இந்தியாவில் மிக கோலாகலமாக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. புத்தாடை உடுத்தி, விதவிதமான இனிப்புகள் செய்தும் பட்டாசுகள் வெடித்து குதூகலமாகக் கொண்டாடும் இந்நாளில் லட்சுமி தேவியின் அருளால் வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என நினைப்பது வழக்கம்.

இதுப்போன்றவர்களுக்காக மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ ஆல் கடந்த 1957 ஆம் ஆண்டு முதல் தீபாவளியை முன்னிட்டு பங்கு வர்த்தகத்திற்கு என்று ஒரு மணி நேரத்தை ஒதுக்கி முகூர்ந்த டிரேடிங்கை அறிமுகம் செய்தது.

இதே போன்று தேசிய பங்குச் சந்தை என்எஸ்ஜ யும் 1992 ஆம் ஆண்டு முதல் தீபாவளி நாளில் தொடங்கியது. இதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டாளர்கள் முகூர்த்த வர்த்தகத்தின் போது சிறப்பான முதலீடுகளை செய்ய முன்வருகின்றனர். இவ்வாறு செய்யும் அனைத்து முதலீடுகளும் நல்ல செழிப்பை தருவதாகவே நம்புகின்றனர். மேலும் லட்சுமி தேவியின் அருளால் நல்ல நாளாக அமையும் என்றும் முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

முகூர்த்த டிரேடிங்கின் சிறப்புகள்:

தீபாவளி திருநாளன்று மேற்கொள்ளப்படும் முகூர்த்த வர்த்தக நாளில் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வது மங்களரமானது என்கின்றனர் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் நபர்கள். ஒவ்வொரு ஆண்டும் சிறிய முதலீட்டாளர்கள் முதல் பெரிய மற்றும் மூத்த முதலீட்டாளர்கள் வரை அனைவரும் தவறாமல் முதலீட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு செய்வதன் மூலம் சிறிய முதலீட்டில் அதிக லாபம் அளிக்கும் திட்டமாக இது பார்க்கப்படுகிறது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாளில் ஒரு மணி நேரம் முதலீடு செய்வதற்கு நேரம் ஒதுக்கப்படுகிறது.

முகூர்த்த டிரேடிங் தேதி மற்றும் நேரம்:

தீபாவளி திருநாளில் நடைபெறும் முகூர்ந்த டிரேடிங் இந்தாண்டு அக்டோபர் இருபத்தி நான்கு, 2022 அன்று கொண்டாடப்படவுள்ளது. என்எஸ்இ மற்றும் பிஎஸ் இ ல் ஈக்விட்டி, டெரிவேட்டிங் பிரிவில் மாலை 6.15 முதல் 7.15 மணி நேரம் வரையில் வர்த்தகம் நடைபெறவுள்ளது. மேலும் ப்ரீ ஓபனிங் செசன் மாலை ஆறு மணிக்கே தொடங்கி 6.08 மணிக்கு முடிவடையவுள்ளது.

இதேப்போன்று கமாடிட்டி டெரிவேட்டிங் பிரிவில் மாலை 6.15 முதல் 7.15 வரையில் வணிகம் செய்துக் கொள்ளலாம். இதில் தீபாவளி அன்று அதாவது அக்டோபர் இருபத்தி நான்கு அன்று மாலை 7.25 வரையில் வர்த்தகப் பரிமாற்றம் செய்யலாம்.

இதோடு கரன்சி டெரிவேட்டிங் பிரிவில் மாலை 6.15 முதல் 7.15 வரையில் வணிகம் செய்து கொள்ளலாம் எனவும் இதற்கான வர்த்தகப் பரிமாற்றம் 7.25 வரையில் செய்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தீபாவளி திருநாளில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அக்டோபர் இருபத்தி நான்காம் தேதியை மறந்துவிடாதீர்கள்.

Related posts

Leave a Comment