வீ டு கட்டுவதற்கு அதிகமாக நாம் கற்களை பயன்படுத்துகிறோம். அப்படி நாம் பயன்படுத்தும் இந்த கற்களில் நமக்கு தெரியாமல் மர்மமான முறையில் நகரக்கூடிய கற்கள் ரேஸ்டிராக் பிளாயா என்ற இடத்தில் உள்ளதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
13 கிலோ முதல் 300 கிலோ எடை வரை உள்ள கற்கள் கூட நகர்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இந்த கற்கள் எப்படி நகருகின்றன என்பது யாருக்குமே தெரியாத புதிராகவே உள்ளது. அப்படிப்பட்ட இந்த கற்களை குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ரேஸ்டிராக் பிளாயா(Racetrack Playa) என்ற பகுதியில் உள்ள டெத் வேலி(Death Valley) என்ற இடத்திலும் நிவேடா என்ற இடத்திலு ம் பாறைகள் தானாக நகர்கின்றன.
1900களில் இருந்தே இந்த பாறைகள் நகர்வு குறித்து பேசப்படுகிறது. ஆனால் இந்த கல் நகர்வதை குறித்து ஆதாரப்பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
இந்நிலையில் 1915ம் ஆண்டு ஜோன்ஸ் என்பவர் மக்கள் மத்தியில் உள்ள இந்த பேச்சைக் கேட்டு இதைப் பற்றி ஆய்வு செய்துள்ளார் . ஆனால் மறுநாள் பார்க்கும் போது அந்த கற்கள் எல்லாம் வேறு பகுதியில் மாறி இருந்துள்ளன.
அதில் சில கற்கள் நகர்ந்து சென்றதற்கான தடங்கள் இருந்துள்ளன. சில கற்கள் தடங்களே இல்லாமல் நகர்ந்து சென்றுள்ளன. இது குறித்து அவர் முதல் முறையாக ஆய்வு செய்தார். ஆனால் கற்கள் நகர்ந்ததிற்கு எந்த விடையும் அவருக்கு கிடைக்கவில்லை.
அதன் பின் பல விஞ்ஞானிகளின் இந்த நகரும் கற்களைப் பற்றிய ஆய்வுகளைச் செய்துள்ளனர். ஆனால் கற்கள் எவ்வாறு ஒரு இடம் விட்டு ஒரு இடம் நகர்கிறது என யாராலும் சரியான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுவரை அவர்கள் கூறியுள்ள கருத்துக்களின் படி நகரும் கற்களின் கீழ்ப் பகுதியில் கூர்மையாக இருந்தால் கற்கள் நகரும் போது அது நகரும் பாதைகளில் தடம் ஏற்படுகிறது.
மேலும் அதிக தூரம் நகர்ந்து அந்த கூர்மையான பகுதி உடைந்து விட்டாலோ அல்லது மழுங்கி விட்டாலோ அதன் பின் தடம் ஏற்படுவதில்லை.
அதே நேரத்தில் சில நேரங்களில் கற்கள் பிரண்டு விடுகின்றன. அதன்பின் அப்பகுதியில் உள்ள கூர்மையான பகுதியால் தடம் ஏற்படுகிறது.
மேலும் 1948ம் ஆண்டு ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் அப்பகுதியில் பெரும் காற்று வீசுவதன் காரணமாகவே இந்த கற்கள் நகர்வதாகவும் கூறினார். ஆனால் பலர் அந்த கூற்றை ஏற்கவில்லை.
மேலும் சில ஆய்வாளர்கள் இந்த கற்கள் இருக்கும் இடத்திற்கு கீழே அதாவது பல நூறு அடிகளுக்குக் கீழ் ஒரு பெரும் நதி ஓடுகிறது. அந்த நதியின் நீரோட்டத்தின் வேகத்தான் இந்த கற்களை ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு நகர்த்துகிறது என்று கூறியுள்ளனர்.
ஆனால் அப்பகுதியில் உள்ள கற்கள் 300 கிலோ வரை எடை உள்ள கற்களாக இருக்கின்றன. அவைகள் காற்று மற்றும் நீரோட்டத்தினால் நகர்கிறது என்பதை ஏற்க முடியாத ஒன்றாகவே இருந்துள்ளது.
மேலும் சில ஆய்வாளர்கள் இந்த கற்களுக்குக் கீழே சிறிய பிசுபிசுப்பான களிமண் உருவாவதாகக் கூறினர். ஆனால் அப்படி எதுவும் உருவாகவில்லை என சில ஆய்வுகள் மறுத்து விட்டன. ஆனால் அதற்கும் எந்த வித ஆதாரங்களும் இல்லை.
ஆனால் இன்றுவரை அந்த பகுதியில் உள்ள கற்கள் ஒரு இடத்திலிருந்த மற்றொரு இடத்திற்கு நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்குப் பின்னால் இருக்கும் உண்மை என்னவென்று யாருக்கும் தெரியாத புதிராகவே உள்ளது.