September 28, 2022
வேலைகள்

அதிக ஊதியத்தில் மத்திய அரசு வேலை .. 35 வயதிற்கு மேற்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் !

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தில் (NHDC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். தேசிய கைத்தறி மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தற்போது 35 வயதிற்கு உட்படும் எங் ப்ரொபஷ்னல் – 08 பேர், 50 வயதிற்கு உட்படும் ஆலோசகர் – 02 பேர், 58 வயதிற்கு உட்படும் மூத்த ஆலோசகர் – 02 என மொத்தம் 12 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ரூபாய்.50 ஆயிரம் முதல் ரூ.1.25 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கத் தகுதி உள்ளவர்கள் https://nhdc.org.in/upload/NHDC_Vacancy_Circular_for_Website31032021.pdf எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் nhdc.org.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக 20.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவற்றின் மூலமாகத் தேர்வு செய்யப்படுவர். மேலும் விபரங்களுக்கு nhdc.org.in அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கில் பார்க்கவும்.

Related posts

Leave a Comment