January 31, 2023
டிப்ஸ்

வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் இயற்கை மருந்துக்கள்!

சிலருக்கு அஜீரண கோளாறுகள் மற்றும் உடல் சூட்டினால் வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படும். இது தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால் உடலில் சோர்வு ஏற்பட்டு வேறு நோய்களுக்கு ஆளாக வாய்ப்பு உண்டு.

இந்த பிரச்சனையை எளிய முறையில் ஒரே நாளில் குணப்படுத்த வீட்டில் இருக்கும் சில பொருள்களே போதுமானது. அப்படி என்னென்ன பொருள்கள் பயன்படுகிறது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சீரகத் தண்ணீர்

சீரகத் தண்ணீர் வயிற்றுக்கோளாறுகளுக்கு நல்ல மருந்து. சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரை ஒரு நாள் முழுவதும் குடித்து வர நல்ல மாற்றம் கிடைக்கும்.

சுக்கு

சிறிதளவு சுக்கு பொடியை மோரில் கலந்து ஒரு நாள் 3 முறை குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

பப்பாளி

பப்பாளிக்காயை 2கப் தண்ணீர் ஊற்றி காய்த்து அதனை வடிகட்டி அந்த நீரை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

எலுமிச்சை

எலுமிச்சை சாற்றில் சிறிதளவு உப்பு, சர்க்கரை கலந்து தண்ணீரில் கலக்கி குடித்தால் வயிற்று போக்கு குணமாகும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கலந்து ஒரு நாளில் 3 முறை குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

சாதம்

வெள்ளை சாதத்தை மட்டும் சிறிது இடைவெளி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு படிப்படியாகக் குறையும்.

வெந்தயம்

வயிற்று போக்கை குணப்படுத்த வெந்தயம் ஒரு சிறந்த மருந்து. சிறிதளவு வெந்தயப்பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

மாதுளை

வயிற்று போக்கிற்கு சிறந்த பழமாக மாதுளை உள்ளது. மாதுளம் பழத்தை ஜூஸ் செய்தோ அல்லது பழமாகவோ 2 பழங்களை சாப்பிட்டால் வயிற்றுபோக்கு குணமாகும் .

மோர்

ஒரு டம்ளர் மோரில் உப்பு, மஞ்சள் ,சிறிதளவு சீரகம் கலந்து அன்றைய நாள் முழுவதும் மூன்று முறை குடித்தால் வயிற்று போக்கு குணமாகும்.

தேன்

தேன் மற்றும் ஏலக்காய் பொடியை சூடு தண்ணீரில் கலந்து அன்றைய தினம் முழுவதும் 3 முறை குடித்தால் வயிற்றுப்போக்கு சரியாகும் .

Related posts

Leave a Comment