பார்வையற்றவர்களுக்கு புதிய செயற்கை நுண்ணறிவு கண்ணாடி

கண்கள் நன்றாக இருக்கும் நாமே இருட்டில் தட்டுத் தடுமாறுவோம். ஆனால் கண் தெரியாமல் எப்பொழுதும் இருளாகவே இருப்பவர்களின் வாழ்க்கையை சற்று நினைத்துப் பாருங்கள். அழகான இந்த உலகை பார்க்க முடியாதது மட்டுமன்றி பல்வேறு கேலி கிண்டல்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.

தினசரி வேலைகளை செய்வதற்கு மிகவும் சிரமம் கொள்ளும் இவர்கள் சோகத்தை சொல்லி மாளாது. தற்போதைய விஞ்ஞான வளர்ச்சிகள் பார்வை இல்லாதவர்கள் வாழ்க்கையில் ஒரு சில முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளது.

பார்வை இல்லாதவர்களுக்காக கண்டுபிடிக்கப்படும் பல பொருள்கள் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அப்படி சமீபத்தில் வெளிவந்திருக்கும் கண்ணாடி ஒன்று பார்வையற்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட ஒரு சிறந்த தயாரிப்பு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

உலகின் ஜாம்பவானான கூகிள் பல்வேறு தயாரிப்புகளை பலருக்கும் உபயோகப்படும் வகையில் கண்டுபிடித்து வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. இவர்கள் ஒவ்வொரு துறையிலும் மிக சிறப்பாக காலூன்றி பல்வேறு முக்கிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறார்கள்.

அப்படி பார்வையற்றவர்களுக்கான தயாரிக்கப்பட்ட இவர்களது படைப்புதான் புதிய என்விஷன் கிளாஸ் என்னும் தயாரிப்பு. பார்வையற்றவர்களுக்கான ஒரு அருமையான செயற்கை நுண்ணறிவு பொருந்திய ஸ்மார்ட் கண்ணாடியை உருவாக்கியுள்ளது கூகுள்.

என்விஷன் கிளாஸஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த கண்ணாடிகளை பார்வையற்றவர்கள் அணிந்து கொண்டு நடந்தால் போதும் அவர்கள் காணும் பொருள்களின் விளக்கத்தை உடனடியாக ஒலி வடிவின் மூலம் ஸ்மார்ட் கண்ணாடிகள் தெரிவிக்கும்.

இதில் artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு AL பவர்ட் சாப்ட்வேர் டெக்னாலஜியை (AI-powered software technology) கூகிள் பயன்படுத்தியுள்ளது. இந்த கூகுள் கிளாஸ் சிறிய இலகுரக கண்களில் அணியக்கூடிய கணினி ஆகும்.

இது முன்னால் இருக்கும் படங்களில் இருந்து பல்வேறு வகையான தகவல்களை சேகரித்து பிரித்தெடுக்க என்விஷனின் இந்த மென்பொருள் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் அதாவது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது.

பின்னர் படங்களைப்பற்றி கண்ணாடியை அணிந்து இருப்பவர்களுக்கு சத்தமாக செல்கிறது. இதனால் கண்ணாடி அணிந்திருப்பவர்கள் சுற்றியுள்ள சூழலை பற்றி நன்கு புரிந்துகொள்ள முடியும். கற்பனை வடிவில் அவர்கள் முன் உள்ள பொருள்களை தெரிந்துகொள்ளலாம்.

பொருள்கள் மட்டுமின்றி உணவு பேக்கேஜிங் மேல் உள்ள எழுத்துக்கள், சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள், கணினி காட்சி திரைகள், க்யூ ஆர் கோடு மற்றும் பார் கோடுகள், ஹோட்டல்களில் எழுதப்பட்டிருக்கும் சாப்பாடு வகைகள் இது போன்ற எல்லா விஷயங்களையும் படிக்க முடியும்.

அது மட்டுமல்லாமல் இந்த மென்பொருளால் மனித முகங்களை அடையாளம் காணவும் முடியும், காட்சிகளை விவரிக்க முடியும், வண்ணங்களை கண்டறியவும் முடியும், பொருள்களை கண்டறியவும் முடியும், பொருள்களை கண்டுபிடிக்கவும் முடியும், ஆவணங்கள் மற்றும் கடிதங்களைப் படிக்கவும் முடியும்.

60 க்கும் மேற்பட்ட மொழிகளை வாசிக்கும் திறன் இந்த கண்ணாடியில் உள்ள மென்பொருளில் உள்ளது என்பது இதன் முக்கிய சிறப்பாகும்.

பார்வையற்றவர்களுக்காக சந்தையில் பல்வேறு வகையான கண்ணாடிகள் இருக்கும் பொழுது இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் செயல்பாடு தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. இந்த கண்ணாடிகளை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

இதன் விலை சுமார் ஒரு லட்சத்து இருப்பதாயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வரை இருக்கிறது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இது பயனாளர்கள் கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்வை குறைபாட்டுடன் வாழும் மக்களில் பலருக்கு இந்த விலையில் இந்த கண்ணாடியை வாங்க முடியாது. இதன் விலையை இந்நிறுவனம் குறைத்தால் பார்வையற்றவர்கள் பலரும் இதனால் பயனடைவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *