August 18, 2022
டெக்னாலஜி

இனி அந்த மாதிரி எல்லாம் ஏமாற்ற முடியாது… உஷாரான இன்ஸ்டாகிராம்…!

உலகின் முன்னணி சமூக வலைதள செயலியாக இன்ஸ்டாகிராம் செயல்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் போகிறது. எனினும், செயலியை இலவசமாக டவுன்லோட் செய்து, யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலை பல சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகின்றன.

இதன் காரணமாக இன்ஸ்டாகிராம் தளத்தில் வரும் 18+ பதிவுகளையும் சிறுவர் முதல் அனைவரும் பார்க்கக்கூடிய சூழல்களும் இருக்கின்றன. இந்த சூழல் சிறுவர்களுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாக விளங்குகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், இன்ஸ்டாகிராம் தளத்தில் விரைவில் புது அம்சம் ஒன்றை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புது அம்சம் மூலம் யோடி(Yoti) எனும் தொழில்நுட்பத்தினால் பயன்படுத்துவோர் வயதை கணக்கிட்டு அதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு தேவையான தரவுகளை காண்பிக்க திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக பயனர்கள் தங்களின் செல்பி வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

யோடி(Yoti தொழில்நுட்பம் மூலம் செல்பி வீடியோவில் உள்ள பயனர்களின் வயதை கணக்கிட்டு அதற்கு ஏற்ற வகையில் வீடியோக்களை காண்பிக்கும் என கூறப்படுகிறது. வயதை சரிபார்த்த பின் செல்பி வீடியோ மெட்டா மற்றும் யோடி தொழில்நுட்பத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புது அம்சம் மூலம் ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ற வகையிலான தரவுகளை வழங்க முடியும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்து இருக்கிறது. “ஆன்லைனில் ஒருவரின் வயதை அறிந்து கொள்வது சந்தை ரீதியில் மிகவும் சவால் மிக்க காரியம் ஆகும்.

நம் துறையில் மற்ற நிறுவனங்கள், அரசாங்கங்கள மற்றும் இதர அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம், இதன் மூலம் ஆன்லைனில் சிறப்பாக வயதை கணக்கிட முடியும்,” என இன்ஸ்டாகிராம் வலைதள பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஒரு வேளை பயனர் தங்களின் அடையாள சான்றின் புகைப்படத்தை வழங்க முடிவு செய்தால், அது தொடர்பான புகைப்படம் முப்பது நாட்களுக்குள் நீக்கப்பட்டு விடும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்து இருக்கிறது.

Related posts

Leave a Comment