November 30, 2022
வேலைகள்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு – டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்…!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குழாய் அமைக்கும் பிரிவில் தொழிற்பயிற்சி (Apprentices)பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர்.

பணியின் விவரங்கள்:

பணியின் பெயர் – Apprentices

பணியிடங்கள் – 465

வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் பதினெட்டு வயதில் இருந்து அதிகபட்சம் இருபத்தி நான்கு வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

பணியின் பெயர் – கல்வித்தகுதி

Mechanical – மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபல் இன்ஜீனியரிங் டிப்ளமோ அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
Electrical – எலக்டிரிக்கல் இன்ஜீனியரிங் டிப்ளமோ அல்லது ஐடிஐ.

Telecommunication & Instrumentation – எலக்டிரிக்கல், கமுனிகேசன், ரேடியோ கமுனிகேசன் அல்லது போன்ற டிப்ளமோ அல்லது ஐடிஐ.

Assistant Human Resource – பட்டப்படிப்பு தேர்ச்சி

Accountant – பட்டப்படிப்பு தேர்ச்சி

Data Entry Operator – பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி

Domestic Data Entry Operator – பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி

உதவித்தொகை விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Apprentices Act,1961/1973/ Apprentices Rules 1992 விதியின் படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்குத் தகுதியானவர்கள் தேர்வு முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://plapps.indianoil.in/PLApprentice/user/main?adv_no=OQ==&Digest=qB1UN4YsLrV5SBh47ymR/A

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30/11/2022.

தேர்வு நடைபெறும் என்று கருதப்படும் நாள்: 18/12/2022.

மேலும் விவரங்களுக்கு https://iocl.com/admin/img/Apprenticeships/Files/867edbe73144457db65b515d1e6293a3.pdf

Related posts

Leave a Comment