June 10, 2023
டெக்னாலஜி

இனி வாய்ஸ் ஆடியோவை ஸ்டேட்டஸாக வைக்கலாம்…! வருகிறது வாட்ஸ்அப்பில் புதிய ஸ்டேட்டஸ் உட்பட அப்டேட்கள்…!

வாட்ஸ்அப் செயலியில் தற்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதி இருக்கும் நிலையில், புதிய அப்டேட்டாக “வாய்ஸ்” நோட்ஸ்களையும் இனி ஸ்டேட்டசாக வைக்கும் வசதியினை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காலையில் விழித்ததும் இப்போதெல்லாம் எல்லோரும் முதலில் பார்ப்பது வாட்ஸ் அப் ஆகத்தான் இருக்கும் என்றும் சொல்லும் அளவுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்துவர்களில் மத்தியில் வாட்ஸ்அப் மிகவும் பிரபலம் ஆகிவிட்டது.

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் அவ்வப்போது புதுப்புது மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது புதிதாக மூன்று அம்சங்கள் பீட்டா வெர்ஷனில் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் “வாய்ஸ் ஆடியோ”வை ஸ்டேட்டஸாக வைக்கலாம்.

தற்போது மூன்று வகையான அம்சங்கள் பீட்டா 2.224.6.4.0 வெர்ஷனில் வந்துள்ளது. அவை., வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வாய்ஸ் மெசேஜ் வைப்பது, வாட்ஸ்அப் என்ற பெயரில் அதிகாரப் பூர்வ சாட், வாட்ஸ்அப் டெக்ஸ்க்டாப்பில் “கால்”லுக்கு என்று பிரத்யேகமான மெனு ஆகும்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வாய்ஸ் மெசேஜ்:

வாட்ஸ்அப் ஸ்டேடஸில் இதுவரையில் வீடியோ, படங்கள், எழுத்துக்கள், எமோஜிகள் என பலவற்றை வைக்கும் வகையில் இருந்தது. இனி அதோடு வாய்ஸ் ஆடியோவையும் ஸ்டேட்டஸாக வைக்கலாம்.

ஸ்டேட்டஸ் கிளிக் செய்தவுடன், எந்த எழுத்துக்களும் டைப் செய்யாத போது,”மைக்” ஐகான் ஒன்று இருக்கும். அதை “கிளிக்” செய்து, உங்கள் குரலை பதிவு செய்து, ஸ்டேடஸாக வைக்கலாம். மேலும், அதை யாரெல்லாம் பார்க்கலாம், கேட்கலாம் என்பதையும் நீங்களே தேர்வுசெய்யலாம்.

வாட்ஸ்அப் என்ற பெயரில் அதிகாரப்பூர்வ சாட்:

வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பிலேயே ஒரு வாட்ஸ்அப் என்ற பெயரில் “சாட்” கொண்டு வரப்படுகிறது. இதில் வாட்ஸ்அப் சம்பந்தமான அப்டேட்டுகள், முக்கிய அறிவிப்புகள் போன்றவை பயனர்களுக்கு அனுப்பப்படும்.

இதன் மூலம் பயனர்கள் நேரடியாகவே வாட்ஸ்அப் தொடர்பான சமீபத்திய விவரங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும், தேவைப்படவில்லை எனில் அதை டெலிட் அல்லது மறைக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

வாட்ஸ்அப் டெக்ஸ்க்டாப்பில் “காலுக்கு”என்று பிரத்யேகமான மெனு:

வாட்ஸ்அப் செயலியைப் போலவே, கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் சாப்ட்வேர் மேம்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் டெஸ்க்டாப் சாப்ட்வேரில், கால் ஹிஸ்டரி என்ற ஆப்ஷன் கொண்டு வரப்படுகிறது. அதில், உங்கள் அழைப்புகள் மட்டும் தனியாக பட்டியலிட்டு காட்டப்படும்.

இந்த மூன்று அம்சங்களும் தற்போதைக்கு பீட்டா பதிப்பு வைத்திருக்கும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மிக விரைவில் எல்லா பயனர்களுக்கும் கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Leave a Comment