January 31, 2023
டிப்ஸ்

ஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடை வேகமாக அதிகரிக்க

சிலரது உடல் மிகவும் ஒல்லியாக அழக்கற்று காணப்படும். அவர்கள் என்னதான் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிப்பதே இல்லை.

அப்படிப்பட்டவர்கள் உடல் எடை அதிகரித்து அழகான உடல் அமைப்பை பெற ஒரு சில வழி முறைகள்.

உடல் எடை வேகமாக அதிகரிக்க தினமும் இரண்டு அல்லது மூன்று வாழைப்பழங்களை சாப்பிடுங்கள். உடல் எடை அதிகரிக்கும்.

புரத சத்து அதிகம் உள்ள வேக வைத்த இரண்டு முழு முட்டையை மத்திய சாப்பாட்டுடன் எடுத்து கொள்ளுங்கள். உடல் எடை அதிகரிக்கும். குறிப்பாக மதியம் சோறு சாப்பிட வேண்டும்.

உடல் எடை அதிகரிக்க 15 உலர் திராட்சையை தினமும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்தை அளித்து உடல் எடை அதிகரிக்கும். உலர் திராட்சையில் 99 கலோரிகள் அடங்கியுள்ளது.

தினமும் 10 முந்திரி சாப்பிடுங்கள் உடல் எடை அதிகரிக்கும். அத்துடன் 100 மிலி எருமை மாட்டு பால் குடியுங்கள். இது உடல் எடையை வேகமாக அதிகரிக்க செய்யக் கூடியது.

தினமும் மீன் சாப்பிட்டு வந்தால் அவற்றில் உள்ள ஊட்டச்சத்தினால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். அதிலும் இறால் சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.

நாட்டுக் கோழி கறி, ஆட்டுக்கறி இவற்றை மதிய சாப்பாட்டுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இரவும் அரிசி சோறு எடுத்துக் கொள்வதும் உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

உடல் எடை அதிகரிக்க சைவ உணவான பீன்ஸ் சாப்பிட வேண்டும். இதில் விலங்கில் உள்ள புரத சத்து அதிகம் உள்ளது. இதை அதிகம் உட்கொண்டாலும் எடை அதிகரிக்கும்.

பாதாம் உடல் எடை வேகமாக அதிகரிக்க, ஆரோக்கியமான உணவாகும். இது நரம்பு வளர்சிக்கு பயன்படும் உணவாகும். இதை தினமும்10 வீதம் ஊற வைத்து சாப்பிடுங்கள்.

கோழியின் நெஞ்சுக்கறி சாப்பிட்டு வந்தால், இதில் உள்ள கொழுப்பு சத்தானது உடல் எடை வேகமாக அதிகரிக்க பயன்படுகிறது.

அடிக்கடி வெண்ணெய், நெய் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். காலையில் நெய் ஊற்றிய தோசை எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரிக்கும்.

இதனை நீங்கள் தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட்டாலே உங்கள் உடல் எடை அதிகரித்து வித்தியாசத்தை உணர முடியும்.

ஒரு வாரத்தில் எடை அதிகரிக்க செய்ய இந்த ஜூஸ் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்

காய்ச்சிய பசும்பால் – 1 டம்ப்ளர்
வாழைப்பழம் – 1
முந்திரி – 7
உலர்திராட்சை – 15
பாதாம் – 5
பிஸ்தா – 10
ஏலக்காய் – 2

செய்முறை

வாழைப்பழத்தை சிறு துண்டாக வெட்டி கொள்ளவும். ஜூஸ் அடிக்க கூடிய ஜாரில் நறுக்கிய வாழைப்பழம், முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, ஏலக்காய் மற்றும் பால் சேர்த்து அரைக்கவும்.

அரைத்த பின் இந்த பானத்தை ஓர் டம்ப்ளரில் ஊற்றி கொள்ள வேண்டும். இதனை தினமும் காலை அல்லது மாலை ஒரு வேளை குடிக்க வேண்டும்.

இந்த பானத்தில் சேர்க்கப்பட்டுள்ள வாழைப்பழம், முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் பால் ஆகியவற்றில் கொழுப்பு மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது.

ஆகவே ஒல்லியாக இருப்பவர்கள் இதை குடித்தால் ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரித்து அழகான உடல் அமைப்பை பெறுவார்கள்.

Related posts

Leave a Comment