May 30, 2020
விளையாட்டு

ஒரு லட்சம் மக்களுக்கு டென்னிஸ் புயல் சானியா மிர்சா வழங்கிய நிதி எவ்வளவு தெரியுமா?

யூத் ஃபீட் என்ற அமைப்பின் மூலம், சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு உதவ போதுமான தொகையை நிதியுதவியாக கொடுத்துள்ளார் சானியா மிர்சா.

இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவால் நோய் பரவாமல் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், மிகவும் பின் தங்கிய மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தங்கள் அன்றாட நாளை கழிப்பதில் கடினம் ஏற்பட்டுள்ளது.

இந்த கொரோனா வைரஸால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பினை ஈடுசெய்ய பல்வேறு தரப்பினர் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களிடம் நிவாரண நிதி கொடுத்து உதவி வருகின்றனர்.

இந்நிலையில் யூத் ஃபீட் என்ற அமைப்பின் மூலம், சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு உதவ போதுமான தொகையான 1.25 கோடி ரூபாயை நிதியுதவியாக கொடுத்துள்ளார் சானியா மிர்சா.

இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கடந்த வாரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தோம்.

சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு உதவியதோடு அல்லாமல் இந்த முயற்சி மேலும் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment