டெக்னாலஜி

எதிரியம் மெர்ஜ் அப்டேட் வெற்றிகரமாக முடிந்தது…!

கடந்த சில மாதங்களில் கிரிப்டோகரன்சி சந்தை முதலீட்டாளர்கள் நிறுவனங்கள், சேவை பெறுவோர், அளிப்போர் என அனைத்து தரப்பினரும் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர்.இதற்கு மிக முக்கியமான காரணம் கிரிப்டோகரன்சி விலை உயர்வோ அல்லது சரிவோ இல்லை. கிரிப்டோகரன்சி சந்தையில் மிகவும் பிரபலமாக இருக்கும் கிரிப்டோ தளங்களில் ஒன்றான எதிரியம்(Ethereum) நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சாப்ட்வேர் அப்டேட் தான்.

எதிரியம் தளம் உலகின் முன்னணி கிரிப்டோ தளங்களில் ஒன்றான எதிரியம் தளத்தில் செய்யப்படும் சாப்ட்வேர் அப்டேட் பெயர் “தி மெர்ஜ்”. இது 2014 இல் முதன் முதலில் அறிவிக்கப்பட்டதிலிருந்து பல தாமதங்களையும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டது.

இந்தச் சாப்ட்வேர் அப்டேட் கிரிப்டோ வர்த்தக மற்றும் சேவை தளங்களைத் தலைகீழாக மாற்றப்போகிறது என்பதால் பல கேள்வி எழுப்புகின்றனர்.

எதிரியம் கிரிப்டோ நிலைத்தன்மையை நோக்கி மறுசீரமைப்பிற்காக நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் மெர்ஜ் அப்டேட் கிரிப்டோ யூசர்களுக்கும், கிரிப்டோ மற்றும் பிளாக்செயின் அப்ளிகே ஷன்களின் மதிப்பு மேம்படுத்துவது மட்டுமல்லாமல், Web3 க்ளைமேட் இன்னோவேட்டர்ஸ் , புதிய தலைமுறை சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் மற்றும் அமெரிக்கக் காலநிலை முயற்சிகள் போன்றவற்றுக்கும் கூடப் பெரிய அளவில் பயன்படுகிறது.

வெற்றி செப்டம்பர் 13-15 தேதிகளில் எதிரியம் மெர்ஜ் அப்டேட் ரன்-அப் தடையின்றி முடிந்தால் இது எதிரியம்-ஐ தலைகீழாக மாற்றும் என்றால் மிகையில்லை. இதேவேளையில் தோல்வி அடைந்தால் பல பிரச்சனைகளும் உண்டு. எதிரியம் நெட்வொர்க்

எதிரியம் நெட்வொர்க் அல்லது தளத்தில் ஆயிரக்கணக்கான Web3 திட்டங்கள் மற்றும் 71 மில்லியன் எதிரியம் அடிப்படையிலான கிரிப்டோ வாலெட்டுகளுக்கான தொழில்நுட்ப தூணாகச் செயல்படுகிறது. இந்த அப்டேட் தோல்வி அடைந்தால் ஒரு பெரும் வர்த்தகத் துறையே பாதிக்கப்படும்.

எனர்ஜி பயன்பாடு எதிரியம் பவுண்டேஷன் கூற்றுப்படி, எதிரியம் தளத்தில் தி மெர்ஜ் அப்டேட் மூலம் நெட்வொர்க்கின் எனர்ஜி பயன்பாட்டை 99.95% குறைக்க முடியும். உலகம் முழுவதும் எனர்ஜி பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் குறித்துப் பேசப்பட்டு வரும் நிலையில் இத்தகைய அப்டேட் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இது மட்டும் அல்லாமல் எதிரியம் தளத்தில் தி மெர்ஜ் அப்டேட் மூலம் இந்த நெட்வொர்க்-ன் முக்கிய உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான அடித்தளத்தை அமைக்கும். அதேபோல் இந்த அப்டேட் எதிரியம் தளத்தின் செக்யூரிட்டியை பெரிய அளவில் மேம்படுத்தும்.

எதிரியம் மெர்ஜ் அப்டேட்(PoS) மூலம் எதிரியம் நெட்வொர்க் அதிகாரப்பூர்வமாக ப்ரூஃப்-ஆஃப்-ஸ்டேக்குக்கு மாறியுள்ளது. Beacon Chain இன் கன்சியஸ் லேயர் மற்றும் எதிரியம் Mainnet எக்ஸ்கியூட்டிவ் லேயர் ஆகியவை இணைக்கப்பட்டுச் செப்டம்பர் 15 அன்று 06:42:42 UTC நேரத்தில் பிளாக் 15537393 இல் இணைக்கப்பட்டன என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts

Leave a Comment